இப்போ பாலிவுட் கிருத்தி சனோனுக்கு எங்கே கேமரா வச்சிருக்கு?.. வெடித்த ராம்சரண் ரசிகர்கள்!
ஹைதராபாத்: ராம்சரணின் பெத்தி படம் வெளியான போது படத்தில் இருந்த நல்ல விஷயங்களை எல்லாம் விட்டு விட்டு 10 நிமிடங்கள் வரும் ஜான்வி கபூர் போர்ஷனை பூதாகரமாக்கி போட்டு அடித்த அடியில் டைரக்டர் புச்சி பாபு சனாவே மன்னிப்புக் கேட்கும் நிலை உருவானது.
மேலும், படத்தின் வசூலும் ஸ்லோ டவுன் ஆனது. 350 கோடி பட்ஜெட்டில் உருவான பெத்தி படம் 400 கோடி வசூலை கடக்கவே நாக்கு தள்ளிவிட்டது. தென்னிந்தியர்கள் ஹீரோயின்களின் தொப்புளுக்கே ஃபோகஸ் வைப்பதாக குற்றச்சாட்டுக்களை அதிகளவில் பாலிவுட்டில் இருந்து ஐடி விங் ஏற்படுத்தியது என்று ராம் சரண் ரசிகர்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர்.

இந்நிலையில், பாலிவுட்டில் நேற்று வெளியான காக்டெயில் 2 படத்தில் கிருத்தி சனோன் பிகினி உடையில் இடம்பெற்ற காட்சிகளை பார்த்து காண்டான ராம்சரண் ரசிகர்கள் ஜான்வி கபூருக்கு ஒரு நியாயம்? கிருத்தி சனோனுக்கு ஒரு நியாயமா? என ரவுண்டு கட்ட ஆரம்பித்த்டுள்ளனர்.
Objectification பண்றாங்க: தென்னிந்திய சினிமாவில் நடிகைகளின் திறமையை நடிப்பில் காட்ட விடாமல் அவர்களை கவர்ச்சிப் பொருளாக காட்சிப்படுத்துகின்றனர் என கடுமையான குற்றச்சாட்டுகளை பலர் எழுப்பினர். குறிப்பாக ஜான்வி கபூர் இந்தி நடிகை என்பதால் அங்கிருந்தே ஏகப்பட்ட தாக்குதல் ராம் சரண் படம் பாலிவுட்டில் ஓடிவிடக் கூடாது என்பதை குறிவைத்து தாக்கினர் என்கிற பஞ்சாயத்து வெடித்தது. பல பிரபலங்கள் ஜான்வி கபூரை மோசமாக புச்சி பாபு சனா காட்சிப் படுத்தியுள்ளார் என்றும் படத்துக்கு தேவையில்லாத விஷயம் இது என்றும் ஜான்வி கபூரின் தொப்புளுக்கும் மார்புக்கும் மட்டுமே கேமரா ஃபோகஸ் ஆனது என இயக்குநரையும் ஒளிப்பதிவாளர் ராண்டியும் ரவுண்டு கட்டி அடித்த அடி படத்திற்கே பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
மன்னிப்புக் கேட்ட இயக்குநர்: ராம்சரண் மற்றும் ஜான்வி கபூரின் காட்சிகள் பிளேஃபுல்லாக இருக்க வேண்டும் என்றே நினைத்து வைத்தேன். ஆனால், அது தவறாக பார்க்கப்படும் பட்சத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் அதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என மன்னிப்புக் கேட்டார்.
கிருத்தி சனோனுக்கு எங்கே கேமரா வச்சிருக்கீங்க?: பெத்தி படத்துக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்புகள் ராம்சரண் ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியிருந்த நிலையில், நேற்று வெளியான காக்டெயில் 2 படத்தில் கடலில் பிகினி உடையில் கிருத்தி சனோன் குளிக்கும் காட்சிகளை குறிப்பிட்டு, கிருத்தி சனோனுக்கு இப்போ பாலிவுட் எங்கே கேமரா வச்சிருக்கு பாருங்க என்றும் இதெல்லாம் தப்பு கிடையாதா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், கிருத்தி சனோன் படுக்கையில் நிர்வாணமாக இருக்கும் காட்சிகளையும் ஷேர் செய்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பஞ்சாயத்து எங்கே போய் முடியுமோ? என்கிற கேள்வி தான் எழுகிறது.


Click it and Unblock the Notifications