சேலையில் அம்சமாக உள்ள ஐஸ்வர்யா தத்தா.. கண்கொட்டாமல் ரசிக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: கோலிவுட்டில் பரபரப்பான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா

நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் வரிசையில் இப்பொழுது ஐஸ்வர்யா தத்தாவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கை நிறைய படங்களில் படு பிஸுயாக நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது சேலையில் மனதை வருடும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ரசிகர்களை கண்கொட்டாமல் பார்க்க வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் என்ட்ரி

தமிழ் சினிமாவில் என்ட்ரி

அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்கள் வெளியாகவில்லை என்றாலும் கோலிவுட்டில் பரபரப்பான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவருக்கு அடுத்தடுத்து கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் அமையவில்லை. இருப்பினும் தங்கை உள்ளிட்ட சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார்

சிறுசிறு வேடங்களில்

சிறுசிறு வேடங்களில்

பிக் பாஸ் சீசன் 2 அதிரடி போட்டியாளராக கலந்துகொண்டு நிகழ்ச்சியின் டிஆர்பிக்கு பெரிதும் உதவிய ஐஸ்வர்யா தத்தாவுக்கு எந்த அளவுக்கு எதிர்ப்பு இருந்தது அதே அளவிற்கு ஆதரவும் பல மடங்கு உயர்ந்தது. பிக் பாஸ் வீட்டில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பேசுபொருளாக இருந்தவர் இறுதி சுற்று வரை சென்றார்.

ஆரியுடன் ஜோடி

ஆரியுடன் ஜோடி

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வந்தாலும் இன்றுவரை எந்த ஒரு படமும் இவருக்கு வெளியாகவில்லை.

கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா,அலேகா, பொல்லாத உலகில் பயங்கரம் கன்னித்தீவு, மிளிர் உள்ளிட்ட படங்களில் கைவசம் தற்போது நடித்து வருகிறார். இதில் அலேகா படத்தில் நடிகர் ஆரியுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். டீசர் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சூழலில் படம் மிக விரைவிலேயே திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

லீட் ரோலில்

லீட் ரோலில்

நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் பார்முலாவை பின்பற்றி வரும் ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடித்து வரும் மிளிர் படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். முற்றிலும் காட்டுப் பகுதியில் நடைபெற்று வரும் மிளிர் படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று கொண்டுள்ளது

சேலையில் சொக்கவைக்கும்

சேலையில் சொக்கவைக்கும்

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல கொஞ்சி கொஞ்சி பேசினாலும் கவர்ச்சி காட்டுவதில் முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் ஐஸ்வர்யா தத்தாவின் கவர்ச்சி புகைப்படங்கள் பல சமூக வலைதளங்களில் ஆட்டிப் படைத்தன . மிகக் குறைந்த அளவிலேயே ஹோம்லி லுக்கில் தோன்றும் ஐஸ்வர்யா தத்தா நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது சேலையில் பார்க்கவே அம்சமாக உள்ள அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் கண் கொட்டாமல் பார்த்து ரசித்து வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X