ஒரு கவிதையே காற்று வாங்குது.. நடிகை ஆண்ட்ரியாவை அனு அனுவாக ரசிக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: தமிழில் சவாலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து திறமையான நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா

இப்பொழுது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு இரண்டில் லீட் ரோலில் நடித்து வருகிறார்

பாடகி, நடிகை என பல திறமைகளைக் கொண்ட ஆண்ட்ரியா இப்பொழுது கடற்கரையில் காற்று வாங்கும் க்யூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்க அதனை பார்த்த ரசிகர்கள் அனு அனுவாக ரசித்து வர்ணித்து வருகின்றனர்

முக்கிய வேடங்களில்

முக்கிய வேடங்களில்

பாடகியாக அறிமுகமாகி இப்போது நடிகையாக வெற்றி வலம் வந்து கொண்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார் கதாநாயகியாக நடிக்கும் அதேசமயம் சில படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றி வருகிறார்

கதாநாயகிக்கு முக்கியத்துவம்

கதாநாயகிக்கு முக்கியத்துவம்

நடிகைகள் பலரும் நடிக்க தயங்கும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பாராட்டுக்களைப் பெற்று வரும் ஆண்ட்ரியாவுக்கு தரமணி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது . ஆயிரத்தில் ஒருவன்,தரமணி மற்றும் வடசென்னை போன்ற படங்களில் ஆண்ட்ரியாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது இப்பொழுது தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிக்க துவங்கியுள்ளார் அந்த வகையில் கா என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்து வருகிறார்

ஊ சொல்றியா

ஊ சொல்றியா

நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் பல பாடல்களை பாடியும் வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் தமிழ் பதிப்பில் ஊ சொல்றியா மாமா பாடலை பாடி இணையதளத்தை தெறிக்க விட்டார். ஊ சொல்றியா மாமா தெலுங்கு மொழியில் உருவாகி இருந்தாலும் தமிழ் பதிப்பு இணையதளத்தில் ஹிட்டானது குறிப்பாக ஆண்ட்ரியாவின் குரலில் இந்த பாடல் மேலும் மெருகேறி அனைத்து தரப்பினரையும் குத்தாட்டம் போட வைத்தது.

பிசாசு இரண்டாம் பாகம்

பிசாசு இரண்டாம் பாகம்

துப்பறிவாளன் படத்திற்கு பிறகு மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2ல் தற்போது நடித்து வருகிறார். பிசாசு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. எப்போதும் வித்தியாசமான கதைகளை யோசிக்கும் மிஷ்கின் பிசாசு படத்தில் பேயை தேவதையாக காட்டியிருந்தது ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்தது இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது இந்த படத்தில் ஆண்ட்ரியா லீட் ரோலில் நடிக்க விஜய் சேதுபதி, பூர்ணா,சந்தோஷ் பிரதாப் மற்றும் அஜ்மல் கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

கடற்கரையில் ஜாலியாக

கடற்கரையில் ஜாலியாக

இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது இவ்வாறு நடிகை பாடகி என பல முகங்களைக் கொண்ட ஆண்ட்ரியா கடற்கரையில் ஜாலியாக காற்று வாங்கிய க்யூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்க அதை பார்த்த ரசிகர்கள் ஒரு கவிதையை காற்று வாங்குது என அணு அணுவாக ரசித்து வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X