Don't Miss!
- News சென்னையை நெருங்கும் குடிநீர் தட்டுப்பாடு? 5 ஏரிகளில் குறைந்த நீர்மட்டம்.. 2023யை விட மோசமான நிலைமை!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஸ்டைலாக புத்தகம் படிக்கும் ஹன்சிகா... புத்தகத்தைப் புரட்டும் பதுமையே என வர்ணிக்கும் ரசிகர்கள்!
சென்னை: தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஹன்சிகா மோத்வானி இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்
ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக உருவாகி வரும் மகா அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள ஹன்சிகா மோத்வானி எப்பொழுது லைப்ரரியில் செம ஸ்டைலிஷாக படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் புத்தகத்தை புரட்டும் பதுமையே என வர்ணித்து வருகின்றனர்.
90களில் பிரபலமாக ஓடிய அந்த படத்தின் காப்பியா வலிமை? கலாய்த்துத் தள்ளும் நெட்டிசன்கள்!
கொழுக் மொழுக் ஹீரோயினாக
தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கொழுக் மொழுக் ஹீரோயினாக தமிழில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருந்த ஹன்சிகா மோத்வானிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை அளித்தனர். எங்கேயும் காதல், ஓகே ஓகே, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2 , ஆம்பள , அரண்மனை ,மான் கராத்தே, வாலு என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.
ஹன்சிகாவின் 50வது படம்
வாலு படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்த ஹன்சிகா அதன் பிறகு காதல் கிசுகிசுவில் சிக்கியதால் சிம்புவுடன் தொடர்ந்து நடிக்காமல் இருந்தார் இந்நிலையில் ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக உருவாகிவரும் மகாவில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ஜாமீல் இயக்கத்தில் உருவாகி வரும் மகா திரைப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கதைகளில்
நயன்தாரா,கீர்த்தி சுரேஷ், திரிஷா ஆகியோரின் வரிசையில் இப்பொழுது ஹன்சிகா மோத்வானியும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இந்திய சினிமாவில் நடிகைகள் யாரும் முயற்சிக்காத புதிய முயற்சியில் 105 மினிட்ஸ் என்ற திரைப்படம் ஹன்சிகாவின் நடிப்பில் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானி நடித்து வருகிறார். இப்படத்தில் 105 நிமிடங்கள் இடைவிடாமல் ஒரே ஷாட்டில் ஹன்சிகா மோத்வானி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் ஹாரர் திரில்லர் பின்னணியில் உருவாகி வருகிறது.
புத்தகம் புரட்டும் பதுமையே
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒருசேர உருவாகிவரும் "மை நேம் ஸ்ருதி" என்ற படத்தில் ஹன்சிகா மோத்வானி இப்பொழுது படு பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி அனைவரையும் வியக்க வைத்தது. கொழுக்கு மொழுக்கு தேகத்திலிருந்து உடல் எடையை குறைத்து இப்பொழுது ஸ்லிம்மாக மாறியுள்ள ஹன்சிகா லைப்ரரியில் செம ஸ்டைலாக படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் புத்தகத்தை புரட்டும் பதுமையே என வர்ணித்து வருகின்றனர்.