சட்டையை கழட்டிவிட்டு செம கூலாக போஸ் கொடுத்த இந்துஜா ... வாவ் என வாயை பிளந்த ரசிகர்கள்!
சென்னை: திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து இப்பொழுது பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை இந்துஜா.
அந்த வகையில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காக்கி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி வரும் இந்துஜா இப்பொழுது சட்டையை கழட்டிவிட்டு செம கூலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ஈர்த்து வாவ் சொல்லி வருகின்றனர்.

இரண்டாவது கதாநாயகி
கடந்த 2017ஆம் ஆண்டு இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் படத்தில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை இந்துஜா முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தங்கை மற்றும் இரண்டாவது கதாநாயகி என மேயாத மான் படத்தில் பிரமாதப்படுத்தியவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன. எடுத்தவுடனேயே கதாநாயகியாக நடிக்காமல் படிப்படியாக சிறுசிறு கதாபாத்திரங்களிலும் நடித்து இப்பொழுது கதாநாயகி அந்தஸ்தை பெற்றுள்ளார்

சென்டிமென்ட் காட்சிகளிலும் கைதட்டல்களை பெற்றிருந்தார்
மெர்குறி,60 வயது மாநிறம்,பில்லா பாண்டி, பூமராங், சூப்பர் டூப்பர், மகாமுனி என பல திரைப்படங்களில் இந்துஜா நடித்து இருந்தாலும் விஜயின் பிகில் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்த இந்த திரைப்படம் பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையமாக கொண்டு வெளியானது. இதில் இந்திய கால்பந்தாட்ட வீராங்கனையாக இந்துஜா நடித்து இருந்தார். சென்டிமென்ட் காட்சிகளிலும் கலக்கி கைதட்டல்களை பெற்றிருந்தார்

மூக்குத்தி அம்மனிலும் சிறு வேடத்தில்
இப்பொழுது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காக்கி என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் இரண்டாவது கதாநாயகியாக இருந்து படிப்படியாக கடின உழைப்பின் மூலம் முன்னேறி ஹீரோயினாக வலம் வரும் இந்துஜாவுக்கு சமூகவலைத்தளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளன. சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா இணைந்து நடித்த மூக்குத்தி அம்மனிலும் சிறு வேடத்தில் வந்து செல்வார்

சட்டையை கழட்டிவிட்டு செம கூலாக
இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இந்துஜா இனி கவர்ச்சி காட்டவும் தயார் என கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி இருக்க சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்பொழுது சட்டையை கழட்டிவிட்டு செம கூலாக ஹாட் போஸ் கொடுத்துள்ள ஹாட் புகைப்படங்களை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் வாவ் சப்பி குயின் என வர்ணிக்க தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











