ஒரே ஒரு போட்டோ தான்.. பாடி ஷேம் பண்ணவங்க எல்லாமே கப்சிப்.. தலைவர் ரீல் மகள்ன்னா சும்மாவா!

சென்னை: 30 வயதை கடந்த நடிகை நிவேதா தாமஸ் உடல் எடை அதிகரித்து விட்டதாக தொடர்ந்து ஏகப்பட்ட ட்ரோல்களும், பாடி ஷேமிங்கும் சோஷியல் மீடியாவில் அனல் பறந்த நிலையில், ஒரே ஒரு சேலை கட்டும் போட்டோவால் ஒட்டுமொத்த நெட்டிசன்களும் கப்சிப் மோடுக்கு மாறிவிட்டனர்.

2008ம் ஆண்டு ஜெயராம் நடிப்பில் மலையாளத்தில் வெளியான வேறுதே ஒரு பார்யா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் நிவேதா தாமஸ். தளபதி விஜய்யின் குருவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பே 2000ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ராஜ ராஜேஸ்வரி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

Netizens shuts their body shaming mouth after Nivetha Thomas shares a glamorous saree pic
Photo Credit:

கமல்ஹாசன் மகளாக பாபநாசம் படத்திலும் சூப்பர் ஸ்டார் மகளாக தர்பார் படத்திலும் நடித்துள்ளார். சமீப காலமாக நிவேதா தாமஸ் லுக் குறித்து ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்த நிலையில், ரம்யா பாண்டியன் போல ஒரே ஒரு போட்டோ வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

குழந்தை நட்சத்திரம் டு ஹீரோயின்: தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, மீனா என பல குழந்தை நட்சத்திரங்கள் மிகப்பெரிய நடிகர்களாக மாறியுள்ளனர். அந்த வரிசையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிவேதா தாமஸ் தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். போராளி, நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்த நிவேதா தாமஸ் கடைசியாக தெலுங்கில் வெளியான 35 படத்திலும் ரசிகர்களை தனது நடிப்பால் கவர்ந்தார்.

Netizens shuts their body shaming mouth after Nivetha Thomas shares a glamorous saree pic
Photo Credit:

உருவ கேலிக்கு ஆளான நிவேதா தாமஸ்: அஜித் குமார், சிம்பு என ஏகப்பட்ட பிரபலங்களின் உடல் எடை கூடிய போது நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். ஆனால், அவர்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்து மீண்டும் ஸ்லிம் மோடுக்கு மாறி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினர். நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை அதிகரித்த நிலையில், அதிலிருந்து மீள முடியாமல் ரொம்பவே கஷ்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், 30 வயதே ஆகும் நடிகை நிவேதா தாமஸ் பாடி ஷேமிங் ட்ரோல்களில் சிக்கினார்.

ஒரே ஒரு போட்டோ தான்: இந்நிலையில், அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் நேற்று ஒரே ஒரு சேலை கட்டிய போட்டோ தான் போட்டார். அதில் உள்ள கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள் நிவேதா தாமஸின் அழகை வர்ணித்து வருகின்றனர். அதிலும், ஒரு நெட்டிசன், இன்னும் 10 வருஷத்துக்கு நீங்க திருமணமே பண்ணிக்க வேண்டாம் என்றும் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X