பேண்ட் எங்கம்மா?: கார்த்தி ஹீரோயினை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்

By Siva

பெங்களூர்: தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரஷ்மிகா மந்தனாவை பேண்ட் எங்கே என்று கேட்டு நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

விஜய் தேவரகொண்டாவின் கீத கோவிந்தம் படம் மூலம் பிரபலமானவர் கன்னட நடிகையான ரஷ்மிகா மந்தனா. அவர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் கார்த்தி 19 படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார்.

படத்திற்கு பூஜை போட்டபோது வெளியான புகைப்படத்தை பார்த்தவர்கள் கார்த்திக்கு ஏற்ற ஜோடியாக உள்ளார் ரஷ்மிகா என்றார்கள்.

ரஷ்மிகா

ரஷ்மிகா மந்தனா பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்று ஹோம்லியாக இருக்கிறார் என்று பெயர் எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் பேண்ட் போடாமல் டி சர்ட் மட்டும் போட்டு புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி அவரை கண்டமேனிக்கு திட்டத் துவங்கிவிட்டனர்.

ஹாட்

ஹாட்

ரஷ்மிகா நீங்கள் க்யூட்டாக இருப்பது தான் எங்களுக்கு பிடித்துள்ளது. இப்படி ஆடையை குறைத்து ஹாட்டாக இருக்கும் ரஷ்மிகாவை சுத்தமாக பிடிக்கவில்லை. நடிப்புத் திறமை மீது நம்பிக்கை வையுங்கள், ஆடை குறைப்பு வேண்டாம். அது நீண்ட காலம் கை கொடுக்காது என்று ரசிகர்கள் அக்கறையுடன் அறிவுரை வழங்கியுள்ளனர்.

கலாய்

ரஷ்மிகா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த குசும்புக்கார நெட்டிசன்களோ, அய்யோ அவசரத்தில் பேண்ட் போட மறந்துவிட்டீர்களே என்று கூறி கலாய்த்துள்ளனர். சிலரோ, ரஷ்மிகா ஒரு பெண் என்றும் பாராமல் மிகவும் கேவலமாக கமெண்ட் போட்டுள்ளனர். நடிகைகள் இப்படி கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கமாகிவிட்டது.

 இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

ரஷ்மிகா மந்தனாவின் தீவிர ரசிகர்கள் சிலர் அவரின் அரைகுறை ஆடை புகைப்படங்களை பார்த்துவிட்டு கடும் கோபம் அடைந்து உங்களை இனி இன்ஸ்டாகிராமில் பின்தொடர மாட்டேன் என்று கூறி கிளம்பிச் சென்றுவிட்டனர். திரையுலகில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் இனியும் இப்படி செய்யாதீர்கள் என்கிறார்கள் ரசிகர்கள். நம்ம தமிழ் ரசிகர்களோ, புஜுக்கு புஜுக்கு, என்ன சிம்ரன் இதெல்லாம் என்று கேட்டு கலாய்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X