இதையெல்லாமா என்கரேஜ் பண்ணுவீங்க? மதுபானங்களுக்கு விளம்பரம் செய்யும் நடிகைகளை விளாசும் நெட்டிசன்கள்!

சென்னை: மதுபானங்களுக்கு விளம்பரம் செய்யும் வகையில் பிரபல நடிகைகள் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ஷேர் செய்துள்ளதை பாரத்த நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

சினிமாவில் முன்னணி நடிகை நடிகர்களாக உள்ள பலரும் விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றனர். சினிமாவில் நடிப்பதைக் காட்டிலும் விளம்பர படங்களில் கோடி கணக்கில் வருமானம் ஈட்டி வருகின்றனர் நடிகர் நடிகைகள்.

முன்னணி நடிகைகள் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் அழகு சாதனப் பொருட்களுக்கு ஆதரவாக விளம்பரம் செய்து வருகின்றனர். துணிக்கடை, நகைக்கடை விளம்பரங்களை தாண்டி பணத்திற்காக தரமற்ற பொருட்களுக்கும் விளம்பரம் செய்து வருகின்றனர்.

வாங்கிக்கட்டி வருகிறார்கள்

வாங்கிக்கட்டி வருகிறார்கள்

இதனால் பல நடிகை மற்றும் நடிகர்கள் சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர்.
ஈமு கோழி வளர்ப்பு, கல்வி நிறுவனங்களின் விளம்பரங்கள், ஆன்லைன் ரம்மி என பல விளம்பர படங்களில் நடித்து பலர் பிரச்சனையை சந்தித்து இருக்கிறார்கள். இதேபோல் மக்கள் நலனுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு விளம்பரம் செய்தும் வாங்கிக் கட்டி வருகிறார்கள் நடிகர் நடிகைகள்.

மதுபான விளம்பரங்கள்

மதுபான விளம்பரங்கள்

அண்மையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு ஆதரவான விளம்பர படத்தில் நடித்த நடிகை தமன்னா மீது வழக்கு தொடரப்பட்டது. இதேபோல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபு தடை செய்யப்பட்ட புகையிலை விளம்பரத்தில் நடிக்க கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் பிரபல நடிகைகள் இருவர் மதுபானங்களுக்கு ஆதரவாக விளம்பரம் செய்துள்ளனர்.

வெளிநாட்டு மதுவுடன் ஹன்சிகா

வெளிநாட்டு மதுவுடன் ஹன்சிகா

அதாவது பிரபல நடிகைகளான ஹன்சிகா மோத்வானி மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்ட சில நடிகைகள் வெளிநாட்டு மதுபானங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நடிகை ஹன்சிகா மோத்வானி, வெளிநாட்டு மதுபானத்திற்கு விளம்பரம் செய்யும் வகையில் தான் சாப்பிடும் டேபிளில் வெளிநாட்டு ரக மதுபாட்டிலை வைத்து விளம்பரப் படுத்தியுள்ளார்.

வெளிநாட்டு மதுவுடன் பூஜா ஹெக்டே

வெளிநாட்டு மதுவுடன் பூஜா ஹெக்டே

இதேபோல் நடிகை பூஜா ஹெக்டேவும் வெளிநாட்டு மது பானத்திற்கு விளம்பரம் செய்துள்ளார். வெளிநாட்டு மதுபானத்தை கிளாஸில் ஊற்றி மிக்ஸ் செய்துள்ள நடிகை பூஜா ஹெக்டே செமயாய் ஆட்டம் போட்டு அதனை விளம்பரப்படுத்தியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இதையெல்லாம் ஊக்குவிக்காதீர்கள் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குடிக்க தூண்டுகிறார்கள்

திரைப்படங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது தீங்கானது என்று விளம்பரம் செய்யும் நிலையில் இவர்கள் உணவுடன் மதுபாட்டிலை வைத்தும், கிளாசில் மது ஊற்றுவது போன்றும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு இளைஞர்களை குடிக்க தூண்டுவதாக வலைத்தளத்தில் பலரும் விளாசியுள்ளனர்.

விஜய்யுடன் பீஸ்ட் படத்தில்

விஜய்யுடன் பீஸ்ட் படத்தில்

பிரபல நடிகைகள் மது பானத்திற்கு ஆதரவாக விளம்பர படங்களில் நடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது தமிழில் நடிகர் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே முகமூடி படத்தில் தமிழில் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X