போட்டோஷுட்டிற்காக என்ன வேண்டுமாலும் செய்வீர்களா...ஐஸ்வர்யாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

சென்னை : நடிகை ஐஸ்வர்யா தத்தா, போட்டோஷுட்டிற்காக ஆபாச உடைகளில் அத்துமீறி போஸ் கொடுத்து வருவதை நெட்டிசன்கள் மிக மோசமாக திட்டி தீர்த்து வருகிறார்கள். இவரின் இந்த செயலால் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆரம்பத்தில் மியூசிக் வீடியோ, சினிமாக்களில் மிகச் சிறிய ரோல்களில் நடித்து வந்தவர் ஐஸ்வர்யா தத்தா. நகுல் நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதற்கு பிறகு பாயும் புலி, அச்சாரம், சத்ரியன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இவருக்கு கை கொடுக்கவில்லை.

மகத்துடன் காதல் கிசுகிசு

மகத்துடன் காதல் கிசுகிசு

இந்நிலையில் 2018 ம் ஆண்டு நடந்த பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த சீசனில் யாஷிகா ஆனந்த்தும் இவரும் மிக நெருங்கிய தோழிகளாக இருந்தனர். அதே சமயம் சக போட்டியாளரான மகத் ராகவேந்திராவை காதலிப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார் ஐஸ்வர்யா. இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் சர்ச்சையானது. பிக்பாஸ் முடிந்த பிறகும் இதனால் மகத்தின் திருமணத்தில் பிரச்சனை ஏற்பட்டது. பிரிந்த சென்ற காதலியை சமாதானப்படுத்தி, திருமணமும் செய்து கொண்டார் மகத்.

நிர்வாணமாக நடித்த ஐஸ்வர்யா

நிர்வாணமாக நடித்த ஐஸ்வர்யா


பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழால் ஐஸ்வர்யாவிற்கு வெப் சீரிஸ் போன்றவற்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சினிமா வாய்ப்புக்களும் வர துவங்கியது. தற்போது கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா. இதில் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில், ஆடை படத்தில் அமலாபால், பிசாசு 2 படத்தில் ஆண்டிரியா நடித்தது போல் நிர்வாண காட்சியில் நடித்துள்ளார்.

அத்துமீறிய கவர்ச்சி போட்டோஷுட்

அத்துமீறிய கவர்ச்சி போட்டோஷுட்

படங்களில் நடிப்பதுடன் சோஷியல் மீடியாக்களில் மிக மோசமாக ஆபாச ஆடைகளில் தோன்றி போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்து வருகிறார். நடிகைகள் கவர்ச்சி போட்டோஷுட் நடத்துவது சகஜம் தான் என்றாலும் ஐஸ்வர்யா தத்தா மிக மோசமாக எல்லை மீறி செல்வதை நெட்டிசன்கள் மிக கடுமையாக விமர்சித்துள்ளனர். அதே சமயம் ஐஸ்வர்யாவின் தீவிர ரசிகர்கள் இந்த போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விட்டு, வர்ணித்து வருகின்றனர்.

திட்டிதீர்க்கும் நெட்டிசன்கள்

திட்டிதீர்க்கும் நெட்டிசன்கள்

போட்டோஷுட் என்ற பெயரில் இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்களா. மிக மோசமாக போட்டோக்கள் வெளியிடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளாரே. சோஷியல் மீடியாவில் லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காக இவரை போன்ற நடிகைகள் ஏன் தரம் தாழ்ந்து போகிறார்கள் என கேட்டுள்ளனர். சிலர் பட வாய்ப்புக்களுக்காக அதீத கவர்ச்சி காட்டி போட்டோக்கள் வெளியிடுகிறார்கள். இவர்களை போன்றவர்களும் சமூகத்தில் நடக்கும் பல தவறுகளுக்கு காரணம் என மிக கடுமையாக திட்டி தீர்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X