குழந்தையோட பிறந்தநாளுக்கு இவ்ளோ கேவலமாவா டிரெஸ் போடுவீங்க.. எமி ஜாக்சனை வெளுக்கும் நெட்டிசன்கள்!
சென்னை: நடிகை எமி ஜாக்சனின் செல்ல மகன் ஆண்ட்ரியாஸுக்கு ஒரு வயசு ஆகிடுச்சு.
மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது உள்ளாடை அணியாமல் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்டு இருந்த புகைப்படம் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
குழந்தையின் பிறந்தநாள் அதுவுமா இவ்ளோ கேவலமா டிரெஸ் போடுவீங்களா என சில நெட்டிசன்கள் ட்ரோல் செய்துள்ளனர்.

ஹாட் நடிகை
மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இங்கிலாந்து நடிகையான இவர், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ஐ மற்றும் 2.0 உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களில் நடித்துள்ளார். தளபதி விஜய்யின் தெறி படத்திலும் ஹீரோயினாக கலக்கி உள்ளார்.

குடும்ப வாழ்க்கை
தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயட்டுவை காதலித்து வந்த எமி ஜாக்சன், திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் உறவில் இருந்து வருகிறார். இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை ஆண்ட்ரியாஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்தது. குடும்ப வாழ்க்கைக்காக சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வில் உள்ளார் எமி ஜாக்சன்.

குழந்தை வளர்ப்பில் ஆர்வம்
குழந்தை பிறந்தது முதல் சினிமாவுக்கு இடைக்கால முழுக்கு போட்ட நடிகை எமி ஜாக்சன், தொடர்ந்து குழந்தை வளர்ப்பில் தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுக்க குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களும் வீடியோக்களும் நிறைந்து காணப்படுகின்றன. ஏகப்பட்ட லைக்குகளும் குவிந்து வருகின்றன.

ஒரு வயசு ஆயிடுச்சு
குழந்தை ஆண்ட்ரியாஸுக்கு ஒரு வயசு ஆனதை நடிகை எமி ஜாக்சன் சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். காடு போன்ற தீமில் உருவாக்கப்பட்ட கேக்கை, தனது தோட்டத்தில் வைத்து, மகன் ஆண்ட்ரியாஸ் உடன் இணைந்து எமி ஜாக்சன் கேக் வெட்டும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கேவலமான டிரெஸ்
உள்ளாடை அணியாமல் நடிகை எமி ஜாக்சன் தனது முன்னழகை தாராளமாக தெரியும் படி கேக் வெட்டும் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருப்பதை பார்த்த சில நெட்டிசன்கள் குழந்தை பிறந்தநாளுக்கு இப்படியா கேவலமா டிரெஸ் பண்ணுவீங்க என்றும், யாருக்கு பர்த்டேன்னு தெரியல, எமி ஜாக்சன் பிறந்த மேனியாக இருக்கிறார் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

கம்பேக்
குழந்தை ஆண்டிரியாஸுக்கு இப்போ ஒரு வயசு ஆகிட்டதால, சீக்கிரமே சினிமாவுக்கு நடிகை எமி ஜாக்சன் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு சில விளம்பர படங்களுக்கும் அவர் கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்திருந்தார். மேலும், 80 வயது பாட்டியாகும் வரை தான் நடிக்க ஆசைப்படுவதாக கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











