ஷிவானியின் கிளாமரை பார்த்து கடுப்பாகும் ரசிகர்கள்..இதுமட்டும் தப்பா தெரில.அதுமட்டும் தப்பா?

சென்னை: பிக் பாஸ் புகழ் ஷிவானி வெளியிடும் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

சமூகவலைத்தளத்தில் எப்போதும் பிஸியாக இருக்கும் ஷிவானி தினமும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல ரகமான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்று.

சமீபகாலமாக அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ஓவர் கவர்ச்சியாக இருப்பதால்,ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.பல ரகமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

சீரியல் என்ட்ரி

சீரியல் என்ட்ரி

பகல் நிலவு என்ற தொடர் மூலம் திரைத்துறைக்கு அறிமுகம் ஆனவர் தான் ஷிவானி.அதன் பிறகு ஜோடி நம்பர் 1,சரவணன் மீனாட்சி போன்ற பல வாய்ப்புகள் வந்தது.ஆனால் அது ஏதும் கைகொடுக்காத நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அங்கேயும் பல பிரச்சனைகள்,பாலாவுடன் கிசு கிசு போன்ற அனைத்தையும் சமாளித்து வீட்டை விட்டு வெளியே வந்தார்.அவர் அம்மாவும் ஷிவானியை திட்டி தீர்த்ததும் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

கிடைக்காத வாய்ப்பு

கிடைக்காத வாய்ப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்து கொண்டு இருந்த ஷிவானிக்கு எந்த வாய்ப்புகளும் கிடைத்த பாடில்லை.ஆனால் லாஸ்லியா,ரம்யா பாண்டியன் போன்ற சக போட்டியாளர்களுக்கு வாய்ப்புகள் வருவதும் குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Assistant Director ஆக இருந்து Actor ஆனேன் | Actor Ramachandran Chat | Filmibeat Tamil
கவர்ச்சி ஷிவானி

கவர்ச்சி ஷிவானி

எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷிவானி,புடவையில் வந்தாலும் கவர்ச்சியாகவே இருக்கிறார்.பட வாய்ப்புக்காக தான் இவ்வாறு செய்கிறார் என்று பலர் பேசினாலும்,பலர் அவருக்கு சாதகமாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.அவரது புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் பிக் பாஸ் வீட்டில் பாலாவுடன் பழகுவதை எச்சரித்த அம்மாவுக்கு இதெல்லாம் தப்பாக தெரியவில்லையா என்று கேள்வி எழுப்புகின்றனர்.

ஒன்னும் தெரியாது

ஒன்னும் தெரியாது

இப்போது இருக்கும் காலகட்டத்தில் எதையெல்லாம் பதிவிட வேண்டும்,எதை பதிவிட கூடாது என்று யாருக்கும் ஒன்றும் தெரிவது இல்லை.அதனால் வரும் பிரச்சனைகளும் யாருக்கும் புரிவது இல்லை,அனைத்தையும் பதிவிடுவது அசிங்கமாக இருக்கின்றது என்று பதிவிட்டு உள்ளார்.சமீப காலமாக அவர் குத்தாட்டம் போட்ட ரீல்ஸ் வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X