பணத்துக்காக என்ன வேணும்னாலும் செய்வீங்க.. லாஸ்லியாவை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை லாஸ்லியாவின் புதிய போட்டோ ஷுட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை கிழித்து தொங்க விட்டுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா அதன் பிறகு நடிகை லாஸ்லியாவாகிவிட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது கவினை உயிருக்கு உயிராய் காதலித்தார். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அவரை காதலித்தார் லாஸ்லியா.

காதல் முறிந்தது

காதல் முறிந்தது

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு அவருடனான உறவை துண்டித்தார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போதும் கூட நீ யாரோ நான் யாரோ என்பது போல் நடந்து கொண்டார். அப்போதே லாஸ்லியா- கவின் இடையிலான காதல் முறிந்தது என கூறப்பட்டது.

ரசிகர்கள் ஏற்க மறுப்பு

ரசிகர்கள் ஏற்க மறுப்பு

அவர்களின் காதல், ஒரு டிராமா என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக லாஸ்லியா அவரை பயன்படுத்திக் கொண்டார் என்றும் தகவல் வெளியானது. ஆனால் கவின் ரசிகர்கள் இதனை ஏற்க மறுத்தனர்.

கிளாமர் தூக்கலாய்

கிளாமர் தூக்கலாய்

தற்போது அடுத்தடுத்த மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார் லாஸ்லியா. இதற்காக அடிக்கடி போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். வித விதமாய் கிளாமர் தூக்கலாய் அவர் நடத்தும் போட்டோ ஷுட்டுகள் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

பேசு பொருளான கேப்ஷன்

பேசு பொருளான கேப்ஷன்

ஆனால் அவர் ஒவ்வொரு போட்டோவுக்கும் கொடுக்கும் கேப்ஷன் அதைத்தாண்டி வைரலாகிறது. அண்மையில் அவர் ஷேர் செய்த போட்டோவுக்கு கொடுத்திருந்த கேப்ஷன் பெரும் பேசு பொருளானது.

கற்றுக்கொண்டேன்

கற்றுக்கொண்டேன்

அதாவது நான் வாழ்ந்தேன், காதலித்தேன், இழந்தேன், தவறவிட்டேன், காயப்படுத்தினேன், நம்பினேன், மேலும் தவறுகளையும் செய்தேன், ஆனால் இவை எல்லாவற்றில் இருந்தும் நான் கற்றுக்கொண்டேன் என கேப்ஷன் கொடுத்திருந்தார்.

கவினுடனான காதலா?

கவினுடனான காதலா?

இதனை பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் வீட்டில் கவினை காதலித்ததையா கூறுகிறீர்கள் என கேட்டனர். இந்நிலையில் தற்போது மாடர்ன் மிடியில் கலக்கல் போட்டோ ஷுட் நடத்தியிருக்கும் லாஸ்லியா அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

அந்த போட்டோவுக்கு உங்கள் ஆத்மாவை திருப்திபடுத்துங்கள்.. இந்த சமூகத்தை வேண்டாம் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், பணத்துக்காக நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள் என கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya
சமூகம் வேண்டாமா?

சமூகம் வேண்டாமா?

இன்னும் சிலர் சமூகம் வேண்டாமா? அப்புறம் எதுக்கு சோஷியல் மீடியாவில் போட்டோ போடுறீங்க? போன்லேயே வச்சுக்க வேண்டியதுதானே என்றும் சாடியுள்ளனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் அவரது அழகை வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X