ஜெயம் ரவியுடன் கட்டிப்பிடி.. மிஷ்கினுக்கு முத்தம்.. உதவியாளர்னா உடம்பு முடியல.. நித்யா மேனன் டிராமா?
சென்னை: திருச்சிற்றம்பலம் படத்துக்காக நித்யா மேனனுக்கு தேசிய விருது கொடுத்த நிலையில், நிஜமாவே தான் ஒரு சூப்பர் நடிகை என்பதை காதலிக்க நேரமில்லை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நிரூபித்துவிட்டார் என ரசிகர்கள் அவரை கண்டமேனிக்கு திட்டி வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பின்னாடி போகாதீங்கன்னு சொன்னா ஏன் கேட்க மாட்றீங்க என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
நடிகை நித்யா மேனன் இந்தளவுக்கு தீண்டாமையை கடைபிடிப்பவரா? என்றும் ஏகப்பட்ட கண்டனங்கள் சோஷியல் மீடியாவில் கிளம்பும் அளவுக்கு அவரது குறும்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, வினய், டிஜே பானு நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படத்தில் இவர் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்த படம் வெளியாகிறது.
நல்ல நடிகை: சிறு வயதிலேயே ஹனுமான் எனும் படத்தில் நடிக்க ஆரம்பித்த நித்யா மேனன் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் ஹீரோயினாக நடித்து வந்தார். தமிழில் சித்தார்த் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான '180' படத்தில் நடித்து அறிமுகமானார். வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மணி, 24, முடிஞ்சா இவன புடி, மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த பொங்கலுக்கு காதலிக்க நேரமில்லை படமும் சம்மருக்கு தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இட்லி கடை படமும் நித்யா மேனன் நடிப்பில் வெளியாக காத்திருக்கிறது. இவரது நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் விசிறிகளாக உள்ளனர். திருச்சிற்றம்பலம் ஷோபனா போல எங்களுக்கும் ஒரு கேர்ள் ஃபிரெண்ட் கிடைக்காதா என அந்தளவுக்கு ஏங்கினர்.
நடிகர்கள்னா ஓகே.. உதவியாளர்னா உடம்பு சரியில்லை: காதலிக்க நேரமில்லை படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நித்யா மேனன் நடிகர் ஜெயம் ரவியை பார்த்ததும் கட்டிப் பிடித்து வரவேற்றார். இயக்குநர் மிஷ்கினை பார்த்ததும் அவரது கன்னத்தில் முத்தமே கொடுத்தார். மிஷ்கினும் நித்யா மேனன் கையில் முத்தம் கொடுத்தார். நடிகர் வினய்யையும் ஹக் செய்திருந்தார். ஆனால், உதவியாளர் ஒருவர் நித்யா மேனனுக்கு கை கொடுக்க முயலும் போது, வேண்டாம் என்றும் எனக்கு உடம்பு சரியில்லை. உங்களுக்கு கோவிட் ஏதாவது வந்துடும் என நித்யா மேனன் பேசிய வீடியோவை ஷேர் செய்து தற்போது நித்யா மேனன் இப்படிப்பட்ட நபர் என கனவில் கூட நினைக்கவில்லை என திட்டி வருகின்றனர்.
பெண்களுக்கு இரண்டாமிடம்: சினிமாவில் மட்டுமில்லை அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இரண்டாம் இடம் என பாகுபாடு குறித்தெல்லாம் யாரு பேசுறாங்க பாருங்க என்றும் சினிமாவை விட்டே விலக ஆசைப்படுகிறேன். எனக்கு நடிக்கவே பிடிக்கவில்லை என சொல்லிவிட்டு நிஜத்தில் நல்லா நடிக்கிறீயேம்மா என நித்யா மேனனை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். சில நடிகைகள் ரசிகர்களின் போன்களை வாங்கி செல்ஃபி எடுப்பதும், அவர்களை அன்புடன் விசாரிப்பதுமாக இருக்கும் நிலையில், நித்யா மேனன் செய்தது கொஞ்சம் கூட சரியில்லை என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications