அதை போடாம சுத்துறீங்களே வீட்ல கேட்க மாட்டாங்களா.. பிக்பாஸ் பிரபலத்தை வச்சு வாங்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல பிக்பாஸ் நடிகையின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு வாங்கி வருகின்றனர்.
Recommended Video
பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். சக போட்டியாளரான கவினும் சாக்ஷியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்.
ஆனால் லாஸ்லியாவும் கவினை காதலித்ததால் சாக்ஷியை கழட்டிவிட்டார் கவின். இதனால் கடுப்பான சாக்ஷி கவினை விளாசி வீடியோ வெளியிட்டார்.

பட வாய்ப்புகள்
அந்த வீடியோவை பார்த்த கவினின் ரசிகர்கள் சாக்ஷியை சமூக வலைதளங்களில் வச்சு செய்தனர். அதைப்பற்றியெல்லம் கவலைப்படாத சாக்ஷி, தொடர்ந்து ரகம் ரகமாக போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். இதன் பயனாக சாக்ஷிக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன.

சேலையில் போட்டோ
அதன்படி டெடி, சிண்ட்ரெல்லா ஆகிய படங்களில் கமிட்டாகி இருக்கிறார். தற்போது லாக்டவுன் என்பதால் வீட்டில் இருந்த படியே விதவிதமான போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். நாள்தோறும் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்கள் சேலையில் சொக்க வைக்கும் போட்டோக்கள் என ஷேர் செய்து வருகிறார்.

மாடர்ன் டிரெஸ்
இதன் காரணமாக அடிக்கடி சமூக வலைதளங்களிலும் ட்ரென்ட்டாகி வருகிறார் சாக்ஷி அகர்வால். அந்த வகையில் அண்மையில் அவர் சேலையில் காட்சியளித்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தற்போது மாடர்ன் டிரெஸில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

காலை மேலே தூக்கி
அதாவது மெரூன் டாப்ஸில் கலக்கல் போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார். அதில் மேலும் கீழும் டீப் ஓபன் உள்ளதால் ஒரு பக்க தொடையும் ஒரு பக்க மார்பும் தெரிகிறது. இதில் காலை மேலே தூக்கி வைத்து கிறங்க வைத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரது அழகை ஆகா ஓகோவென புகழ்ந்துள்ளனர்.

கேட்க மாட்டாங்களா
அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் இப்படி பேண்ட் போடாமல் சுற்றுகிறீர்களே வீட்டில் இதை எல்லாம் கேட்கமாட்டார்களா என்று விளாசியுள்ளனர். இன்னும் சிலர் ஒரு பெண்ணை போல உடை உடுத்துங்கள் என விளாசி தள்ளியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











