இது ரொம்ப தவறான விஷயம்.. மகனுக்கு முன்னாடி லிப் கிஸ்.. சாமுராய் ஹீரோயினை விளாசும் ரசிகர்கள்!
மும்பை: மகனுக்கு முன்னாடி லிப் கிஸ் அடிக்கும் வீடியோவை சாமுராய் பட நடிகை ஷேர் செய்துள்ள நிலையில், நெட்டிசன்கள் இது ரொம்ப தவறான விஷயம் என விளாசி வருகின்றனர்.
காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 படங்களை எல்லாம் இயக்குவதற்கு முன்னதாக இயக்குநர் பாலாஜி சக்திவேல் சியான் விக்ரமை வைத்து 2002ம் ஆண்டு இயக்கிய படம் தான் சாமுராய்.
அந்த படத்தில் இடம்பெற்ற ஆகாய சூரியனே பாடலையும் அடிதடி அப்பத்தா.. விடுதலை எப்பத்தா என அலப்பறை செய்த அனிதா ஹசானந்தினியையும் ரசிகர்கள் இப்பவும் மறக்கவே இல்லை.

சாமுராய் ஹீரோயின்
மூங்கில் காடுகளே முதல் ஆகாய சூரியன் வரை ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சாமுராய் படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாகவே வலம் வருகின்றன. 2002ல் சியான் விக்ரம், அனிதா ஹசானந்தினி, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சாமுராய் திரைப்படத்தின் ஹீரோயின் அனிதா இந்தி சீரியல்களில் தற்போதும் நடித்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு 7.2 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

41 வயசாகுது
தால் எனும் இந்தி படத்தில் அறிமுகமான அனிதா தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் மூலம் அறிமுகமானார். சாமுராய், சுக்ரன், நாயகன், மகாராஜா உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த இவர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். நாகினி 6வது சீசனில் தற்போது நடித்து வரும் இவருக்கு 41 வயதாகிறது.

7 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை
2013ம் ஆண்டு கோவாவில் கார்ப்பரேட் ஊழியரான ரோகித் ரெட்டியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் வாழ்க்கையை இருவரும் ஜாலியாக என்ஜாய் பண்ண நிலையில், 7 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தையை 2020ல் பெற்றுக் கொண்டனர். ஆரவ் என அந்த குழந்தைக்கு பெயரிட்டு வளர்த்து வருகின்றனர்.

குழந்தைக்கு முன்னாடி லிப் கிஸ்
நடிகைகள் தொடர்ந்து தங்கள் குழந்தைகளுக்கு லிப் கிஸ் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்த நிலையில், அனிதா ஒரு படி மேலே சென்று குழந்தைக்கு முன்னாடியே தனது கணவர் ரோகித்துக்கு லிப் கிஸ் கொடுக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இதுதான் தவறான விஷயம்
அனிதா ஹசானந்தினியின் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை தொடர்ந்து லைக் செய்து வரும் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து, இது ரொம்ப தப்புங்க, குழந்தையை வெறுப்பேற்றும் விதமாக இப்படி உங்கள் அன்பை பரிமாறிக் கொள்வது தப்பு என்றும் குழந்தைக்கு நல்ல விஷயத்தை சொல்லிக் கொடுங்க, இதெல்லாம் தேவையில்லாத ஒன்று என்றும் லைக்குக்காக நடிகைகள் என்னவெல்லாம் செய்றாங்க பாருங்க என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











