இதுக்கு டிரெஸ் போடாமலே இருக்கலாம்.. மொத்த முதுகையும் காட்டிய வேதிகாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: விருது விழாவுக்கு முழு முதுகையும் காட்டியப்படி வந்த நடிகை வேதிகாவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
6ம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் கிளாமர் மற்றும் ஃபேஷன் விருது விழா கடந்த 3ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்றனர்.
ஆலியா பாட், அனுஷ்கா சர்மா, கீர்த்தி சனோன், கியாரா அத்வானி உள்ளிட்ட நடிகைகள் விருதுகளை பெற்றனர். ஸ்டைல் ஐகான் ஆஃப் தி இயர் விருதை இந்த முறை பாலிவுட்டின் முன்னணி நடிகர் சைஃப் அலி கான் தட்டிச் சென்றார்.

கிளாமர் நடிகர்
இந்த ஆண்டின் சிறந்த கிளாமர் நடிகை விருதினை அனுஷ்கா ஷர்மா பெற்றுள்ளார். சிறந்த கிளாமர் நடிகர் விருது வருண் தவானுக்கு வழங்கப்பட்டது.

உள்ளாடை அணியாமல்
இந்த விழாவில் நடிகை வேதிகாவும் கலந்துகொண்டார். சிவப்பு நிற நீண்ட கவுனில் டீப் ஓபன் என தொடை தெரிய ஒய்யாரமாக கலந்துகொண்டார். இதேபோல் அந்த ஆடைக்கு வேதிகா உள்ளாடையும் அணியவில்லை.

நெட்டிசன்கள் கோபம்
மேலும் முழு முதுகையும் காட்டியிருந்தார். வேதிகாவின் இந்த கிளாமர் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது இந்த அரைகுறை ஆடையை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகிவிட்டனர்.
என்ன கன்றாவி இது?
இப்படி ஒரு உடையை உடுத்துவதற்கு நீங்கள் உடுத்தாமலே இருக்கலாம் என கமென்ட் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இது என்ன கன்றாவி என்றும் கேட்டுள்ளனர்.
டிரெஸ காணோம்
நடுவுல கொஞ்சம் டிரெஸ காணோம் என்பதை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
மிஸ் யூ வேதிகா
ஓ மை காட்.. நம்ம கலாச்சாரமிக்க பெண்ணை தொலைத்து விட்டோம் மிஸ் யூ வேதிகா என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

பரதேசியில் அங்கம்மா
வேதிகா, தமிழில் மதராஸி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். தமிழில் சிம்புவுடன் காளை படத்தில் நடித்த அவர், பாலாவின் பரதேசி படத்தில் அங்கம்மா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.


Click it and Unblock the Notifications











