அழகே பொறாமைப்படும் பேரழகி ஆத்மிகாவின் அசத்தல் போட்டோஷூட்!

சென்னை: முதல் படமான மீசைய முறுக்கு வெற்றிக்கு பிறகு ஆத்மிகா நடிப்பில் உருவாகி வந்த எந்த திரைப்படமும் சரிவர வெளியாகவில்லை

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் ஆத்மிகா கதாநாயகியாக நடித்த கோடியில் ஒருவன் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது.

ஆத்மிகாவுக்கு அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருக்க இப்பொழுது அழகே பொறாமைப்படும் அளவிற்கு செம க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

மிகப் பெரிய வெற்றி

மிகப் பெரிய வெற்றி

இசையமைப்பாளராக அறிமுகமாகி இப்போது தமிழ் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி கொண்டிருக்கும் நடிகர் ஆதியின் நடிப்பில் வெளியான திரைப்படம் மீசைய முறுக்கு. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. மீசைய முறுக்கு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற போதிலும் அதன்பிறகு ஆத்மிகா ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே ஒப்பந்தமானார்.

கிடப்பில் போடப்பட்டுள்ளது

கிடப்பில் போடப்பட்டுள்ளது

துருவங்கள் பதினாறு என்ற பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த கார்த்திக் நரேன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் உருவான திரைப்படம் நரகாசூரன். அரவிந்த் சாமி, சந்தீப் கிஷான்,இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா, ஆத்மிகா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த திரைப்படம் திரில்லர் கதை களத்தில் உருவானது. பெரும் எதிர்பார்ப்பில் தயாராகி வந்த இந்த திரைப்படம் இன்றுவரை வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நேரடியாக ஓடிடியில்

நேரடியாக ஓடிடியில்

இதையடுத்து ஆத்மிகா ஹாரர் பின்னணியில் காட்டேரி என்ற படத்தில் நடித்து முடித்தார். இந்த படத்தை இயக்குனர் டீகே இயக்கி இருக்க வைபவ், சோனம் கபூர், என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். காட்டேரி திரையரங்குகளில் வெளியாகாத சூழ்நிலை இருப்பதால் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என தெரியவந்துள்ளது. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து நடித்த இரண்டு திரைப்படங்களுமே வெளியாகாத வருத்தத்தில் இருந்த ஆத்மிகாவுக்கு ஜாக்பாட் அடித்தது போல கோடியில் ஒருவன் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்துள்ளது.

Recommended Video

அப்பாவ ரொம்ப MISS பண்றேன் | ACTRESS AATHMIKA CHAT | FILMIBEAT TAMIL
அழகே பொறாமைப்படும் பேரழகி

அழகே பொறாமைப்படும் பேரழகி

இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்துள்ள விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் படத்தில் கதாநாயகியாக அற்புதமாக நடித்த ஆத்மிகாவுக்கு அந்த படம் மேலும் நற்பெயரை பெற்றுத் தந்தது. நடித்த சில திரைப்படங்களிலேயே இப்பொழுது தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள ஆத்மிகா கவர்ச்சியிலும் ஒன்றும் சளைத்தவரில்லை. அடிக்கடி இவரது கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வர இப்பொழுது அழகே பொறாமைப்படும் அளவிற்கு கொள்ளை அழகில் உள்ள லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள் இணையதளத்தை கலக்கி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X