Don't Miss!
- News
சாதாரண ரைஸ் 'ஃப்ரைட் ரைஸாக' மாறிய விசித்திரம்.. குக்கருக்கு அடியில் பார்த்தால் "உவ்வே.."
- Travel
இந்தியாவிலேயே மிக பழமையான நகரம் நம் பூம்புகார் தானாம் – ஆராய்ச்சி கூறுகிறது!
- Technology
மொபைல் சார்ஜிங் நிக்கவே இல்லையா? இதை மட்டும் செய்தால் எப்பவும் Battery Full தான்!
- Sports
அவங்களாம் சுயநலவாதிகள்.. அயல்நாட்டு வீரர்கள் சதி செய்கிறார்களா??.. சுனில் கவாஸ்கர் பரபரப்பு புகார்!
- Finance
வேண்டாம் என அனுப்பிய USA நிறுவனங்கள்.. அமெரிக்காவில் தான் இருப்போம்.. அடம்பிடிக்கும் ஊழியர்கள்!
- Lifestyle
இந்த 3 ஹார்மோன்கள்தான் பெண்களுக்கு பாலியல் ஆசை குறைய காரணமாம்... உடனே இத சரி பண்ணுங்க...!
- Automobiles
கார்களையே தூக்கி சாப்பிடும் வசதி! புதிய ஹோண்டா ஆக்டிவா விலை இவ்ளோதானா! இந்த மாதிரி ஒரு ஸ்கூட்டரை பாத்ததே இல்ல!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
பஞ்சு மிட்டாய் சேலை கட்டி.. ரசிகர்களை கிறங்க விடும் அஞ்சலி!
சென்னை: கற்றது தமிழ, தரமணி, பேரன்பு ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் ராம் இயக்கத்தில் அஞ்சலி புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்
சமூக வலைதளத்தை க்யூட்டான புகைப்படங்களை அடிக்கடி பதிவிடும் அஞ்சலி இப்போது பஞ்சுமிட்டாய் கலரில் பிங்க் சேலையில் செம க்யூட்டாக உள்ள புகைப்படங்களால் ரசிகர்களை கிறங்க விட்டுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு சர்தார் படப்பிடிப்பு தொடங்கியது... ரசிகர்கள் ஹேப்பி !

முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை
எதார்த்த கதைகளை இயக்கி அதில் வெற்றிகளையும் வரும் இயக்குனர் ராம் திரைப்படங்களுக்கு என்றே இங்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் இயக்குனர் ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்ற இவர் அடுத்தடுத்து நடித்த படங்களிலும் சிறந்த நடிப்பை வெளிக் காட்டி இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார்

இலங்கை தமிழர்களைப் பற்றிய படமாக
குறிப்பாக சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் அஞ்சலி இயக்குனர் ராம் இயக்கத்தில் கற்றது தமிழ், தரமணி, பேரன்பு ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இப்பொழுது மீண்டும் இயக்குனர் ராம் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் நடிகர் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தனுஷ்கோடியில் நடைபெற்று வருகிறது. இலங்கை தமிழர்களைப் பற்றிய படமாக இப்படம் உருவாகி வருகிறது என தகவல்கள் வெளிவந்துள்ளது

பாதிக்கப்பட்ட பெண்களாக
தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் பிங்க் திரைப்படம் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் நடிகர் பவன் கல்யாண் லீட் ரோலில் நடித்த நிவேதா தாமஸ்,அஞ்சலி மற்றும் அனன்யா ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்களாக நடித்திருப்பார்கள். இதில் அஞ்சலியின் அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றது.
Recommended Video

பஞ்சு மிட்டாய் சேலையில்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் முதல் முறையாக தெலுங்கில் நேரடி திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். ராம் சரண் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் நடிகை அஞ்சலி முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் தெலுங்கு,தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. மேலும் காண்பது பொய் மற்றும் பூச்சாண்டி உள்ளிட்ட படங்களில் நடிகை அஞ்சலி தற்போது நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அடிக்கடி க்யூட்டான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் இப்போது பஞ்சு மிட்டாய் கலர் பிங்க் சேலையில் செம க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளம் ரசிகர்களை கிறங்க விட்டுள்ளார்.