டிங்குன்னு கண்ணடித்து ரசிகர்களை சாய்க்கும் ஸ்ம்ருதி வெங்கட் !
சென்னை: நடிகர் ஆர் ஜே பாலாஜி யின் இயக்கத்தில் நயன்தாரா அம்மனாக நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் தங்கையாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஸ்ம்ருதி வெங்கட்
இப்பொழுது பல படங்களில் கதாநாயகியாகவும் தனுஷின் மாறன் படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலிருந்து இவருக்கு வாய்ப்புகள் வருகிற நிலையில் க்யூட்டாக கண்ணடித்து ரசிகர்களை சாய்க்கும் அழகிய புகைப்படங்களை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முதல்முறையாக இரட்டை வேடத்தில்
என்னை அறிந்தால் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த அருண் விஜய்க்கு அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் அருண் விஜய் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் தடம். இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக அருண் விஜய்க்கு ஜோடியாக ஸ்ம்ருதி வெங்கட் நடித்து அறிமுகமானார்.

மூக்குத்தி அம்மன்
பார்க்கும்போதே பக்கத்து வீட்டு பெண் போல தோன்றும் ஸ்ம்ருதி வெங்கட் அதைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார். வானொலியில் தொகுப்பாளராக இருந்த ஆர் ஜே பாலாஜி இப்பொழுது நடிகராகவும் இயக்குனராகவும் கலக்கிக் கொண்டுள்ளார். அந்த வகையில் மூக்குத்தி அம்மன் என்ற படத்தையும் இயக்கினார் ஹீரோவாகவும் நடித்து இருந்தார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.

ஜெய்க்கு ஜோடியாக குற்றமே குற்றம்
மூக்குத்தி அம்மன் என டைட்டில் வைக்கப்பட்டிருந்தாலும் மூன்று தங்கைகள் கொண்ட ஒரு சாதாரண அண்ணனின் போராட்டத்தைப் பற்றியும் அந்த குடும்பத்தின் ஆசைகளை பற்றியும் காமெடி கலந்து மிகவும் சுவாரசியமாக கூறியிருந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது . இதில் ஆர் ஜே பாலாஜியின் மூத்த தங்கையாக ஸ்ம்ருதி வெங்கட் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் . மூக்குத்தி அம்மன் படத்திற்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்த ஸ்ம்ருதி வெங்கட் இப்பொழுது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் மாறன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் ஜெய்க்கு ஜோடியாக குற்றமே குற்றம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கண்ணடித்து ரசிகர்களை சாய்க்கும்
மன்மத லீலை, பகையே காத்திரு, தேஜாவு உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். கவர்ச்சி காட்டாத நேர்த்தியான நடிப்பு குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மிகச் சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ம்ருதி வெங்கட் இப்பொழுது டிங்குன்னு கண்ணடித்து ரசிகர்களை சாய்க்கும் அழகிய க்யூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











