யோகாவில் அசத்தும் ரகுல் பிரீத் சிங்... வாய்பிளக்கும் ரசிகர்கள்!

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அயலான் திரைப்படத்தில் ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடித்து வருகிறார்

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இப்பொழுது மீண்டும் சமாதானத்திற்கு உட்பட்ட இந்தியன் 2 படத்திலும் கதாநாயகியாக இவர் நடித்து வருகிறார்

இந்த நிலையில் யோகாவிலும் பெரும் ஆர்வம் கொண்ட ரகுல் பிரீத் சிங் இப்பொழுது மிக கடினமான யோகாவை அசால்டாக செய்தவாறு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

கார்ப்பரேட் ஆபீஸராக

கார்ப்பரேட் ஆபீஸராக

தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் என கார்த்திக்கு ஜோடியாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்த ரகுல் பிரீத் சிங் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க அதை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக என் ஜி கே படத்திலும் நடித்தார். செல்வராகவன் இயக்கத்தில் அரசியல் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக வெளியான என் ஜி கே படத்தில் ரகுல் பிரீத் சிங் மிகவும் வித்தியாசமான கார்ப்பரேட் ஆபீஸராக மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் .

சயின்டிஃபிக் கதை களத்தில்

சயின்டிஃபிக் கதை களத்தில்

தனது ஒவ்வொரு படத்திலும் வெறும் கதாநாயகியாக மட்டும் வந்து செல்லாமல் முக்கிய வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் இப்பொழுது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்று நேற்று நாளை என்ற டைம் ட்ராவலிங்கை மையப்படுத்திய படத்தை இயக்கி வெற்றி பெற்ற இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்டிஃபிக் கதை களத்தில் உருவாகி வரும் அயலான் படத்தில் ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடித்து வருகிறார். அயலான் தமிழ் ரசிகர்களுக்கு முற்றிலும் புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது

இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக

இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் திரைப்படங்கள் என்றாலே இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் அதிலும் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து திரைப்படம் என்றால் எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள் சென்று விடுவார்கள் . அந்த வகையில் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி நீண்ட வருடங்களுக்கு பிறகு இணையும் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே படப்பிடிப்பு சில பல சிக்கல்களால் நிறுத்தப்பட்டது இன்றுவரை தொடங்கப்படாமல் உள்ளது. ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்து மிக விரைவிலேயே படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார்.

Recommended Video

Sai Pallavi காதலர் கூட நடந்த சுவாரசியங்கள் இந்த படத்துல இருக்கு | Nani, Pallavi, Shyam Singha Roy
கடினமான யோகாவை அசால்டாக செய்து

கடினமான யோகாவை அசால்டாக செய்து

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் யோகாவிலும் மிகப் பெரிய ஆர்வம் கொண்டவர். இந்த நிலையில் வீட்டில் மிக கடினமான யோகாவை அசால்டாக செய்து காட்டிய புகைப்படத்தை இப்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதை பார்த்த அனைவரும் வியப்புடன் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X