ஹாலிவுட் ஹீரோயின் போல பாஸ் லேடி காஸ்ட்யூமில் செம ஸ்டைலிஷாக ரிது வர்மா... மிரண்டு போன ரசிகர்கள்!

சென்னை : கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றவர் நடிகை ரிது வர்மா.

தெலுங்கில் கைநிறைய படங்களை வைத்துக்கொண்டு நடித்து வரும் இவர் இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் கணம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி காட்டாமல் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள ரிது வர்மா பாஸ் லேடியாக மாறி ஹாலிவுட் ஹீரோயின் போல போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

 கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

தெலுங்கு சினிமாவில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த நடிகையை ரிது வர்மா தமிழுக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மூலம் அறிமுகமானார். புதுமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து கலக்கி இருந்தார் . மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், விஜே ரக்ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்து இருக்க தற்போதுள்ள லேட்டஸ்ட் டெக்னாலஜியை பயன்படுத்தி எவ்வாறெல்லாம் ஏமாற்றலாம் என்பதை மிகவும் புதுமையான முறையில் சுவாரசியமாக காட்டியிருந்த இந்த திரைப்படத்தில் ரிது வர்மாவின் கதாபாத்திரம் ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்து அடேங்கப்பா என்ன பொண்ணுடா என கூற வைத்தது.

 விக்ரமுக்கு ஜோடியாக

விக்ரமுக்கு ஜோடியாக

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரிது வர்மாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருக்க இப்பொழுது விக்ரமுக்கு ஜோடியாக துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார். அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து இப்படம் பணப் பிரச்சினை காரணமாக வெளியிடப்படாமல் உள்ளது.

 சுமாரான வெற்றி

சுமாரான வெற்றி

நானின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டக் ஜெகதீஷ் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். ரிது வர்மாவிற்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது .

கணம்

கணம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வெற்றிக்குப் பிறகு இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் கணம் திரைப்படத்தில் ரிது வர்மா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சர்வானந்த் ஹீரோவாக நடிக்கிறார்.

 ஹாலிவுட் ஹீரோயின் போல

ஹாலிவுட் ஹீரோயின் போல

இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நடிகை அமலா இதில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். விரைவில் தமிழ் சினிமாவிலும் தனி இடத்தை பிடிக்கவுள்ள ரிது வர்மா இப்பொழுது ஹாலிவுட் ஹீரோயின் போல பாஸ் லேடி கெட்டப்பில் செம ஸ்டைலிஷாக கோட் சூட் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்துள்ள க்ளாஸியான புகைப்படங்கள் ரசிகர்களை மிரள வைத்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X