பாவாடை சட்டையில் இளசுகளின் மனதை கொள்ளையடிக்கும் ஸ்ம்ருதி வெங்கட்!
சென்னை : அருண் விஜய் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்து கலக்கி இருந்த தடம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஸ்ம்ருதி வெங்கட்.
ஆர்ஜே பாலாஜி,நயன்தாரா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் தங்கையாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
இப்பொழுது தனுஷ் நடிப்பில் உருவாகும் மாறன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள ஸ்ம்ருதி வெங்கட் பாவாடை சட்டையில் பார்த்தவுடனேயே மனதை பறி கொடுக்கும் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை உருக வைத்துள்ளார்.

முதல்முறையாக இரட்டை வேடத்தில்
நடித்த சில திரைப்படங்களிலேயே இப்பொழுது தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறியுள்ளார் நடிகை ஸ்ம்ருதி வெங்கட். ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஸ்ம்ருதி வெங்கட்க்கு தடம் திரைப்படம் மிகப்பெரிய அறிமுகப் படமாக அமைந்தது அருண் விஜய் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் ஸ்ம்ருதி வெங்கட் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருப்பார்.

சென்டிமென்ட் காட்சிகளும்
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா முதல்முறையாக அம்மன் வேடத்தில் நடித்திருந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளிக்கு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. காமெடி கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படத்தில் உணர்வுபூர்வமாக பல சென்டிமென்ட் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜிக்கு தங்கையாக மிகவும் வெகுளியான கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஸ்ம்ருதி வெங்கட் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பலரது பாராட்டுகளையும் பெற்றது.

வெகுளியான தங்கை
இப்பொழுது ஜெய்க்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருக்கும் இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கும் மாறன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது. மாளவிகா மோகனன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பாவாடை சட்டையில்
தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து குடும்பங்கள் கொண்டாடும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ம்ருதி வெங்கட் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகிறது. அந்த வகையில் இப்போது பாவாடை சட்டையில் பார்த்தவுடனேயே மனதை கொள்ளை கொள்ளும் அழகான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











