என்ன ஒரு என்ன ஒரு அழகியடா.. பாவாடை தாவணியில் அதுல்யா வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள் செம வைரல்!
சென்னை: நடிகை அதுல்யா தமிழைத் தொடர்ந்து இப்பொழுது மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார்.
அந்த வகையில் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் அகில் நடிக்கும் ஏஜென்ட் திரைப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
சாந்தனு உடன் இணைந்து நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் மிக விரைவிலேயே ரிலீசாக இருக்க பாவாடை தாவணியில் பளிச்சிடும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.

கவர்ச்சி கதாபாத்திரங்களிலும்
தமிழ் சினிமாவில் விறுவிறு வேகத்தில் அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகை அதுல்யா ரவி. காதல் கண் கட்டுதே மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அதுல்யா ரவி தொடர்ந்து ஏமாளி,சுட்டு பிடிக்க உத்தரவு,அடுத்த சாட்டை,கேப்மாரி, நாடோடிகள் 2 என பல படங்களில் நடித்து இப்பொழுது பிரபலமான இளம் நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார். இதுவரை க்யூட்டான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தி வந்த அதுல்யா ரவி கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிக்க தயார் என அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இரண்டாவது கதாநாயகியாக
இதுவரை தமிழில் மட்டுமே நடித்து வந்த அதுல்யாவுக்கு மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் வருகிறது. அந்த வகையில் மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ள நடிகர் மம்முட்டியின் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மலையாளத்தைத் தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமாக உள்ள அந்த வகையில் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் அகில் நடிக்கும் ஏஜென்ட் என்ற திரைப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அதுல்யா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது

திரில்லர் கதையில்
இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில் நடிக்கும் இந்த திரைப்படம் திரில்லர் கதையில் உருவாகிறது. மேலும் ஷாக்க்ஷி வைத்யா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இரண்டாவது கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்க உள்ளார். தமிழில் தற்போதைக்கு முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் எண்ணித் துணிக உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்

நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகள்
சாந்தனு நடிப்பில் கலகலப்பான கலாட்டா திரைப்படமாக உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இப்படத்தில் சாந்தனு மற்றும் அதுல்யாவுக்கு பல நெருக்கமான காட்சிகளில் வைக்கப்பட்டுள்ளது எனவே ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஃபுல் ட்ரீட்டாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
Recommended Video

பாவாடை தாவணியில் க்யூட்
ஜெய்ஆக்சன் கதை களத்தில் நடித்துள்ள எண்ணித் துணிக படத்திலும் அதுல்யா ஹீரோயினாக நடித்துள்ளார். கேப்மாரி படத்தை தொடர்ந்து ஜெய் மற்றும் அதுல்யா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள இப்படத்தின் இறுதிகட்ட பணிகளில் உள்ளது. இவ்வாறு தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அதுல்யா இப்பொழுது நீல நிற பாவாடை தாவணியில் பார்க்கும் அனைவரையும் கொள்ளை கொள்ளும் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











