அவசரத்துக்கு பேப்பரை சுத்திக்கிட்டு வந்துட்டீங்களா?: நடிகையை கலாய்த்த நெட்டிசன்ஸ்
Recommended Video

மும்பை: விருது விழாவுக்கு செய்தித்தாள் போன்று உடை அணிந்து வந்த நடிகை அதா சர்மாவை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
இந்தி, தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அதா சர்மா. சிம்புவின் இது நம்ம ஆளு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
அவர் விருது விழாவுக்கு டிசைனர் கவுன் அணிந்து சென்றார்.
அதா
ஃபெமினா பியூட்டி விருது விழாவுக்கு அதா சர்மா செய்தித்தாள் போன்று இருக்கும் கவுன் அணிந்து சென்றார். அந்த உடையில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் அவர்.
மீம்ஸ்
செய்தித்தாளை உடையாக அணிந்து வந்துவிட்டீர்களே, பார்த்துமா, கிழிந்துவிடப் போகுது என்று கூறி நெட்டிசன்கள் அதாவை மரணமாக கலாய்த்துள்ளனர். அவரை பற்றி ஏகப்பட்ட மீம்ஸ் போட்டுள்ளனர்.
கிண்டல்
தன்னை கிண்டல் செய்து போடப்பட்ட மீம்ஸுகளை பார்த்து அதா கோபப்படவில்லை. மாறாக மீம்ஸ் போட்டவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.
சிரிப்பு
தன்னை பற்றி வந்த மீம்ஸுகளை பார்த்து அதா சர்மா சிரித்ததுடன் அவற்றை ட்விட்டரில் ஷேர் செய்து அவர்களை கவர்ந்துவிட்டார். கோபப்பட்டால் தானே பிரச்சனை என்று சிரித்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











