Silk Smitha: டர்ட்டி பிக்சரை தொடர்ந்து இன்னொரு சில்க் ஸ்மிதா பயோபிக்.. மெலினா பட காப்பி ஏன்?

சென்னை: சில்க் ஸ்மிதா பயோபிக்கை வைத்து ஏற்கனவே இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியான டர்ட்டி பிக்சர் திரைப்படம் தேசிய விருதுகளை எல்லாம் வென்று அசத்தியது. சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியான சில்க் ஸ்மிதா - குயின் ஆஃப் தி சவுத் படத்தின் க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் எதுவுமே பெரிதாக ஈர்க்கவில்லை என்றும் சில்க் ஸ்மிதாவாக சந்திரிகா ரவி பெரிதளவில் ஒட்டவே இல்லை என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

விஜயலட்சுமியாக இருந்த சில்க் ஸ்மிதா க்ரூப் டான்ஸராக நடிக்க ஆரம்பித்து, அதன் பின்னர் அவரது கால்ஷீட் வாங்கினால் தான் படமே தயாரிப்போம் என தயாரிப்பாளர்கள் அடம்பிடிக்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்தார்.

silk smitha chandrika ravi

ஆனால், அதே வேகத்தில் அவரது உயிரும் பிரிந்து போனது ரசிகர்கள் மனங்களில் நீங்காத வடுவாகவே மாறிவிட்டது. சில்க் ஸ்மிதாவை விஷால், எஸ்.ஜே. சூர்யா நடித்து வெளியான மார்க் ஆண்டனி படத்தில் ரீ க்ரியேட் செய்து ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியிருந்த நிலையில், சந்திரிகா ரவியை வைத்து மற்றொரு சில்க் ஸ்மிதா படத்தை உருவாக்க இயக்குநர் ஜெயராம் முடிவு செய்துள்ளது எந்தளவுக்கு வொர்க்கவுட் ஆகும் என்பதே பெரிய கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

சில்க் ஸ்மிதா பிறந்தநாள்: 1960ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி பிறந்த விஜயலட்சுமி இந்திய சினிமாவில் சில்க் ஸ்மிதாவாக மாறிய நிலையில், அவர் அடையாத உச்சமே இல்லை என்கிற அளவுக்கு ஹீரோயினாகவும் ஐட்டம் டான்சராகவும் புகழின் உச்சிக்கே சென்றார். ஆனால், வெறும் 35 வயதிலேயே மர்மமான முறையில் சில்க் ஸ்மிதா உயிரிழந்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 1996ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி அவர் உயிரிழந்தார். இன்றும் சில்க் ஸ்மிதாவின் ரசிகர்கள் அவரை நினைத்து ஆண்டுதோறும் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை கொண்டாடி வருகின்றனர்.

silk smitha chandrika ravi

வித்யா பாலன் வெறித்தனம்: அஜித்துக்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் ஃபிளாஷ்பேக் படத்தில் நடித்திருந்த வித்யா பாலன் தான் கடந்த 2011ம் ஆண்டு மிலன் லுத்ரியா இயக்கத்தில் வெளியான டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த படத்தில் இம்ரான் ஹாஷ்மி, நஸ்ரூதின் ஷா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை: இந்நிலையில், சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயராம் இயக்கத்தில் வெளியான சில்க் ஸ்மிதா - குயின் ஆஃப் தி சவுத் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி ரசிகர்களை பெரிதும் கவரவில்லை என்றே விமர்சனங்கள் கிளம்பி வருகின்றன. அதற்கு காரணம் சில்க் ஸ்மிதாவாக லீடு ரோலில் இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை சந்திரிகா ரவி நடித்திருந்தது தான் என்கின்றனர்.

silk smitha chandrika ravi

இந்திரா காந்தி சீனெல்லாம் ஓவர்: சில்க் ஸ்மிதா பயோபிக்கில் ஆரம்பத்தில் ஓவர் பில்டப் கொடுக்கும் விதமாக இந்திரா காந்தி சீனையெல்லாம் வைத்து நீங்க அயன் லேடி ஆஃப் இந்தியா அவங்க மேக்னட் லேடி ஆஃப் இந்தியா என்று வசனமெல்லாம் வைத்திருப்பதை பார்த்தாலே சிரிப்பு தான் வருகிறது என சில்க் ஸ்மிதா ரசிகர்களே கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மெலினா படத்தின் காட்சி: மோனிகா பெல்லூசி நடிப்பில் வெளியான மெலினா படத்தில் வருவது போன்ற காட்சியை சில்க் ஸ்மிதா பயோபிக்கிற்குள் இயக்குநர் தேவையில்லாமல் வைத்துள்ளார் என்கிற விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. மார்க் ஆண்டனி படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் செய்ததை போல ஏஐ பயன்படுத்தி சில்க் ஸ்மிதாவை தத்ரூபமாக கொண்டு வந்து படமெடுத்து இருந்தால் வேறலெவலில் இருந்திருக்கும் என்றும் ரசிகர்கள் ஆரம்பத்திலேயே அடி வெளுத்து வருகின்றனர்.

silk smitha chandrika ravi

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X