பாவம்யா இந்த ஜூலி.. மகளிர் தின வாழ்த்து சொன்னது ஒரு குத்தமா.. இப்டி திட்டுறீங்களேப்பா!

ஜூலியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தியையும் சகட்டுமேனிக்கு கிண்டலடித்துள்ளனர் நெட்டிசன்கள்.

சென்னை: மகளிர் தினத்தையொட்டி ஜூலி வெளியிட்ட டிவிட்டர் பதிவிற்கும், நெட்டிசன்கள் வழக்கம் போல் திட்டிப் பதில் பதிவிட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் வீரத்தமிழச்சியாக அடையாளம் காணப்பட்ட ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதத்தால் மக்களிடையே பெரும் அதிருப்தியை சம்பாதித்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறிய பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளினியாகவும், சில படங்களில் நாயகியாகவும் நடித்து வருகிறார் அவர்.

தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் என்ன பதிவு வெளியிட்டாலும், அதனை திட்டுவது, கலாய்ப்பது என நெட்டிசன்கள் சிலர் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

வாழ்த்துக்கள்:

அந்தவகையில், மகளிர் தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில், ‘பெண்ணாய் பிறந்ததற்காக பெருமை கொள்கிறேன். அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்' எனப் பதிவிட்டிருந்தார் ஜூலி. ஆனால் இந்த வாழ்த்துப் பதிவையும் வழக்கம் போல், தங்கள் வாய்க்கு கிடைத்த அவலாக சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.

கேலி:

அவர்களில் சிலர், ‘யாருப்பா உன்ன பொண்ணுனு சொன்னது', ‘அந்த 5 நிமிசம்', ‘நீ பொண்ணா?' என கிண்டல் செய்துள்ளனர். ஆனால் இப்படி பதிவிடுபவர்கள் ஓவியாவின் ரசிகர்கள் தான் என்று, இதற்கு பதில் பதிவிட்டுள்ளனர் ஜூலி ரசிகர்கள்.

சாதனை தான்:

‘கிண்டல் கேலிகளை பொருட்படுத்தாமல் முன்னேறு பெண்ணே. அவர் அவர் துறைகளில் அவர்களால் முடிந்த ஒரு பங்கை இங்கு ஒரு பெண் ஆற்றி முடிப்பதே இங்கு சாதனைதான். நீயும் சாதனையாளர்தான் என்பதை மறவாதே. கிண்டலும் கேலிகளும் உன் பெயரை உயிரோட்டத்துடன் வைத்திருக்கிறது என்பதே நிதர்சனம்' என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.

ஆண்கள் தினம்:

சைடு கேப்பில் இந்த ரசிகர், ‘பெண்கள் தினம் எல்லாம் கொண்டாடுறீங்க. ஆனால், ஆண்கள் தினம்னு நாங்க எதுவும் கொண்டாடுறதில்லை. ஆண்கள் பாவம்பா' என இந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X