பாண்டியாவின் போட்டோவை போட்டு ஒரு வார்த்தை சொன்ன நடிகை: விளாசிய நெட்டிசன்ஸ்
Recommended Video
மும்பை: கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கிறிஸ்டல் டிசோசாவை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.
தொலைக்காட்சி நடிகை கிறிஸ்டல் டிசோசா கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
அவர் புகைப்படத்தை வெளியிட்டு போட்ட கமெண்ட்டில் பாண்டியாவை பற்றி ஒரு வார்த்தை தெரிவித்தார்.
பாண்டியா
கிறிஸ்டல் பாண்டியாவை விட 5 வயது பெரியவர். இந்நிலையில் அவர் பாண்டியாவை சகோதரர் என்று இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் குறிப்பிட்டார். அதில் தவறு இல்லை. ஆனால் நெட்டிசன்களோ அந்த தம்பி என்கிற வார்த்தையை பார்த்து கடுப்பாகி அவரை விளாசியுள்ளனர்.

கிறிஸ்டல்
அதென்ன யாரை பார்த்தாலும் சகோதரர் என்று அழைக்கிறீர்கள். இது எங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. சும்மா சும்மா ப்ரோ ப்ரோன்னு சொல்லாதீங்க என்று நெட்டிசன்கள் கிறிஸ்டலை கடிந்து கொண்டுள்ளனர். சிலரோ பெற்றோரை தொடர்புபடுத்தி அசிங்கமாக பேசினர்.

ஆதரவு
நெட்டிசன்கள் வரம்பு மீறி கிறிஸ்டலை கேவலமாக பேசியதை பார்த்த பாலிவுட் நடிகர் அபர்சக்தி குரானா அவருக்கு ஆதரவாக கமெண்ட் போட்டுள்ளார். தயவு செய்து ஒரு பெண்ணை பற்றி கேவலமாக கமெண்ட் போடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரபலம்
நடிகைகள் சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டால் அவர்களை கிண்டல் செய்வது, திட்டுவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் தான் கிறிஸ்டலும் நெட்டிசன்களிடம் திட்டு வாங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











