அவசர அவசரமாக ட்வீட் போட்டு நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய நடிகை
Recommended Video

மும்பை: கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டிய நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணில் முதன் முறையாக வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது கோஹ்லி தலைமையிலான இந்திய அணி.
இதையடுத்து பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா இந்திய அணியை பாராட்டி ட்வீட் போட்டார்.

ப்ரீத்தி
டெஸ்ட் தொடர் என்பதற்கு பதிலாக டெஸ்ட் போட்டி என்று தவறாக ட்வீட் செய்தார் ப்ரீத்தி ஜிந்தா. இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்க்கத் துவங்கினார்கள். உடனே அவர் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.
போட்டி
டெஸ்ட் போட்டியை ஏற்கனவே இந்தியா வென்றுள்ளது. இது டெஸ்ட் தொடர். அரைகுறை ஞானம் ஆபத்தானது என்று ஒருவர் ப்ரீத்தியை கலாய்த்துள்ளார்.
ஆஸ்திரேலியா
அது தொடர் ப்ரீத்தி போட்டி அல்ல என்று ஒருவர் திருத்தியுள்ளார்.
தெரியவில்லை
ப்ரீத்திக்கு டெஸ்ட் மேட்சிற்கும், டெஸ்ட் சீரீஸுக்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லையே.
வெள்ளை
இந்திய அணி நீல நிறம் அல்ல வெள்ளை நிற உடை அணிந்திருந்தது என்று ஒருவர் ப்ரீத்தியிடம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











