ஆர்வக்கோளாறில் 'தவறு' செய்த ப்ரியா வாரியர்: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

By Siva

Recommended Video

Actress Priya Varrier: பிரியா வாரியரை கலாய்த்த நெட்டிசன்கள்- வீடியோ

திருவனந்தபுரம்: நடிகை ப்ரியா வாரியரை நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கலாய்த்துள்ளனர்.

ஒரு அடார் லவ் படத்தில் கண்ணடித்து பிரபலமானவர் ப்ரியா வாரியர். நெட்டிசன்கள் ஃபுல் டைமாக அவரை கலாய்த்து வருகிறார்கள். இந்நிலையில் அவர் தானாக வந்து நெட்டிசன்களிடம் சிக்கிவிட்டார்.

சும்மாவே கலாய்ப்பவர்கள் ப்ரியா ஒரு தவறு செய்தால் அமைதியாக இருப்பார்களா என்ன?

 இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

ப்ரியா வாரியர், நடிகை சினேகா உல்லல் உள்ளிட்டோர் வாசனை திரவியம் ஒன்றின் விளம்பரத்திற்காக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ப்ரியா ஒரு தவறு செய்துவிட்டார்.

ப்ரியா

ப்ரியா

விளம்பரம் குறித்த வாசகத்தை அந்நிறுவனம் ப்ரியாவுக்கு அனுப்பி வைக்க அவர் அதை அப்படியே காப்பி, பேஸ்ட் செய்துவிட்டார். இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் போடுவதற்கான வாசகம் என்று அந்நிறுவனம் அனுப்பியிருந்ததையும் சேர்த்து காப்பி, பேஸ்ட் செய்ததை பார்த்த நெட்டிசன்கள் கலாய்க்கத் துவங்கிவிட்டனர்.

 போஸ்ட் நீக்கம்

போஸ்ட் நீக்கம்

நெட்டிசன்கள் தன்னை கிண்டல் செய்வதுடன் திட்டியதை பார்த்த ப்ரியா தான் தவறு செய்ததை உணர்ந்து அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டார். ஆனால் அதற்குள் பலரும் அந்த போஸ்ட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்துவிட்டனர்.

 திஷா பதானி

திஷா பதானி

முன்னதாக பாலிவுட் நடிகை திஷா பதானியும் ப்ரியா வாரியர் செய்த அதே தவறை செய்து நெட்டிசன்களிடம் வசமாக சிக்கினார். ப்ரியா வாரியருக்கு நேரமே சரியில்லை போன்று. ஏதாவது ஒரு விஷயத்திற்காக கலாய்க்கப்படுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X