சும்மா லூசு மாதிரி பேசாதீங்க: பிரபல நடிகையை விளாசிய நெட்டிசன்கள்

By Siva

Recommended Video

மீ டூ பற்றி பேசிய நடிகை ராணி முகர்ஜி- விளாசிய நெட்டிசன்கள்- வீடியோ

மும்பை: மீ டூ பற்றி பேசிய பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியை நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்த பிறகு பாலிவுட்டில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்தது. இந்நிலையில் நடிகைகள் ராணி முகர்ஜி, தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, ஆலியா பட், தபு, டாப்ஸி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மீ டூ பற்றி பேசினார்கள்.

அப்பொழுது ராணி பேசியது மக்களுக்கு பிடிக்கவில்லை.

ராணி

தீபிகா, அனுஷ்கா, ஆலியா ஆகியோர் மீ டூ இயக்கத்திற்கு ஆதரவாக பேசினார்கள். ஆனால் ராணியோ பெண்கள் தற்காப்பு கலை கற்க வேண்டும் என்று பேசினார். அதாவது ஆண்கள் மாறமாட்டார்கள் பெண்கள் தான் மாற வேண்டும் என்று அவர் தெரிவித்தது ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

நெட்டிசன்கள்

ராணியின் பேச்சை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்வதுடன் விளாசியுள்ளனர். 2 வயது குழந்தை கூட பாலியல் தொல்லைக்கு ஆளாகிறது. எதுவும் தெரியாத அந்த குழந்தைக்கு எப்படி தற்காப்பு கலையை கற்றுக் கொடுப்பீர்கள். ஒரு மகளுக்கு தாயாக இருந்து கொண்டு இப்படி பொறுப்பில்லாமல் பேசுகிறாரே என்று நெட்டிசன்கள் வருத்தப்பட்டுள்ளனர்.

தீபிகா

அந்த நிகழ்ச்சியை நடத்தியவரை கூட பேச விடாமல் ராணி பெரிய இவர் மாதிரி பேசியது யாருக்கும் பிடிக்கவில்லை. தீபிகா, ஆலியா, அனுஷ்கா ஆகியோர் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் தெளிவாகப் பேசினார்கள்.

தற்காப்பு கலை

பாலியல் தொல்லை கொடுப்பவனுக்கும் தற்காப்பு கலை தெரிந்திருந்தால் என்ன செய்வது? நீங்கள் பெரிய இடத்து மருமகளாக இருப்பதால் உங்களுக்கு இது எல்லாம் புரியாது என்கிறார்கள் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X