பிகினி போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை: கிண்டல் செய்யும் நெட்டிசன்ஸ்
மும்பை: பிகினி புகைப்படம் வெளியிட்ட பாலிவுட் நடிகை வாணி கபூரை நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.
பிரபலங்களுக்கு ஃபிட்னஸ் பயிற்சியாளராக உள்ள யாஸ்மின் கராச்சிவாலா பாலிவுட் நடிகை வாணி கபூரின் பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு 10 வாரங்களில் ஏற்பட்ட மாற்றத்தை பாராட்டியிருந்தார்.
அந்த பிகினி லுக்கிற்காக வாணி கபூர் செமயாக ஒர்க்அவுட் செ்யதுள்ளார்.

வாணி கபூர்
10 வாரங்கள் ஒர்க்அவுட் செய்து வாணி அழகான ஃபிகரை பெற்றுள்ளார் என்று யாஸ்மின் பாராட்டியிருந்தார். இதையடுத்து வாணி அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்தார். பாலிவுட் பிரபலங்கள் பிகினி அணிய இப்படி ஒர்க்அவுட் செய்வது சாதாரண விஷயம் தான். ஆனால் வாணியின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்க்கத் துவங்கிவிட்டனர்.

செக்ஸி இல்லை
மரணமாக ஒர்க்அவுட் செய்ததால் வாணி ஆண் போன்று தெரிகிறார் என்று கலாய்த்துள்ளனர். வாணி கபூர் பற்றி நெட்டிசன்கள் மேலும் கூறியிருப்பதாவது, 10 வாரங்கள் அல்ல 50 வாரங்கள் ஒர்க்அவுட் செய்தாலும் அவர் நன்றாக இருக்க மாட்டார். வாணி செக்ஸியே இல்லை. ஃபிளாப் நடிகை. இது போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம். ஒரு படத்தில் உடலை காட்டுவதற்காக 10 வாரங்கள் ஒர்க்அவுட் செய்துள்ளீர்கள். உங்களின் கவர்ச்சியை பார்த்துவிட்டு படத்தில் இரண்டு நடிகர்கள் உங்களுக்காக போட்டி போடுவார்கள். என்னம்மா வாணி போயும் போயும் ரீலுக்காகவா இப்படி செய்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாராட்டு
வாணியின் ரசிகர்களோ அவர் இந்த புகைப்படத்தில் செம ஹாட்டாக, அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். வாணி கபூர் தீயாக இருப்பதாக நம்ம நடிகை ராஷி கன்னா கமெண்ட் போட்டுள்ளார். வாணியின் பிகினி புகைப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் அவரை பாராட்டி கமெண்ட் போட்டுள்ளார்கள்.

பிரேக்
2013ம் ஆண்டு வெளியான ஷுத் தேசி ரொமான்ஸ் இந்தி படம் மூலம் நடிகையான வாணி கபூர் ஆஹா கல்யாணம் மூலம் கோலிவுட் பக்கமும் வந்தார். ஆனால் அதன் பிறகு அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. பாலிவுட்டில் சுமார் 3 ஆண்டுகள் பிரேக் எடுத்துவிட்டு இந்த ஆண்டு தான் மீண்டும் நடிப்பை தொடர்ந்துள்ளார் வாணி கபூர்.


Click it and Unblock the Notifications











