இடையழகை காட்டி கவர்ச்சி நடனமாடிய யாஷிகா...கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

சென்னை : லேட்டஸ்டாக ஹிட்டாக உள்ள பாடல்களுக்கு நடனம் ஆடி வரும் நடிகை யாஷிகா, தற்போது அத்ரங்கி ரே படத்தில் வரும் சக்கா சக்கா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை நெட்டிசன்கள் கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.

Recommended Video

இடையழகை காட்டி கவர்ச்சி நடனமாடிய யாஷிகா - வீடியோ

பிரபல மாடலான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அதற்கு முன் பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்திருந்த யாஷிகா, பிக்பாஸிற்கு பிறகு அனைவருக்கும் தெரிந்தவர் ஆகி விட்டார். இதனால் பல படங்களிலும் கிளாமர் உடையில் வந்து ரசிகர்களை கவர்ந்தார்.

லீட் ரோலில் யாஷிகா

லீட் ரோலில் யாஷிகா

சோஷியல் மீடியாவிலும் தொடர்ந்து பல கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி ஏராளமானவர்களை தன்னை பின் தொடர வைத்தார். அதீத கவர்ச்சி காட்டி இவர் வெளியிட்ட போட்டோக்களால் பட வாய்ப்புகளும் நிறைய இவரை தேடி வர துவங்கியது. எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக கடமையை செய் படத்தில் லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் யாஷிகா.

கார் விபத்தில் சிக்கிய யாஷிகா

கார் விபத்தில் சிக்கிய யாஷிகா

ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வந்த யாஷிகா, ஜுன் மாதம் நடைபெற்ற கார் விபத்தில் சிக்கி மிக மோசமாக காயமடைந்தார். இந்த விபத்தில் நெருங்கிய தோழியை பறிகொடுத்து, கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார் யாஷிகா. நடக்க முடியாமல் படுத்த படுக்கையான யாஷிகா, ஏற்கனவே ஒப்பந்தமாகி இருந்த சில பட வாய்ப்புகளையும் இழந்தார்.

மீண்டும் கவர்ச்சி நடனம்

மீண்டும் கவர்ச்சி நடனம்

பல அறுவை சிகிச்சைகள், பயிற்சிகளுக்கு பிறகு சமீபத்தில் மீண்டும் நடக்க துவங்கிய யாஷிகா, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். சமீப நாட்களாக மீண்டும் கிளாமர் போட்டோஷுட் நடத்த துவங்கி யாஷிகா, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். இதைத் தொடர்ந்து கவர்ச்சி நடனம் ஆடிய வீடியோக்களையும் வெளியிட துவங்கி விட்டார்.

ஏரிகரையில் கவர்ச்சி டான்ஸ்

ஏரிகரையில் கவர்ச்சி டான்ஸ்

இரண்டு நாட்களுக்கு முன் பாவாடை , தாவணியில், புஷ்பா படத்தில் வரும் சாமி சாமி பாடலுக்கு இடுப்பை வளைத்து நெளித்து நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தார் யாஷிகா. இந்நிலையில் தற்போது அந்தரங்கி ரே படத்தில் சாரா அலி கான் கிளாமர் ஆட்டம் போட்ட சக்கா சக்கா பாடலுக்கு, ஏரி கரையில் நின்று கவர்ச்சி நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Wonder woman ன்னு நினைப்பா

Wonder woman ன்னு நினைப்பா

நின்ற இடத்தில் இருந்தே இவர் ஆடிய நடனத்தை நெட்டிசன்கள் பயங்கரமாக கழுவி ஊற்றி வருகிறார்கள். வராத டான்சை வா வா என்றால் எங்கிருந்து வரும். பெரிய Wonder woman னு நினைப்பா உங்களுக்கு. இது என்ன புது கோலம். உடம்பு கொஞ்சம் சரியாகிட்டா போதுமே இஷ்டத்துக்கு ஆட வேண்டியது. இது சக்திமான் காஸ்ட்யூம்ல. மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா என கண்டபடி கலாய்த்து வருகின்றனர். அதே சமயம் சிலர் யாஷிகாவின் அழகை வர்ணித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X