For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இவ்ளோ தத்துவம் தாங்காது அமலா பால்.. ஆன்மாவாம், அழகாம், ஏலியனாம்.. ஒண்ணுமே புரியலையே?

  |

  சென்னை: பெண்களை ஆண்கள் வெறும் குழந்தை பெற்றெடுக்கும் இயந்திரமாகவே பார்க்கிறார்கள் என தொடங்கிய அமலா பால், அவ்வப்போது புரியாத மாதிரியே பல தத்துவங்களை பதிவிட்டு வருகிறார்.

  இந்த லாக்டவுனில் ஆன்மா குறித்த தேடலில் இறங்கிய அமலா பால், ஓஷோ உள்ளிட்ட உயர்ந்த ஞானிகளின் புத்தகங்களை படித்துவிட்டு தொடர்ந்து இதுபோன்ற ட்வீட்களை பதிவிட்டு வருகிறார்.

  ஆனால், குறிப்பால் சிலருக்கு உணர்த்தவே அவர் இதுபோன்ற தத்துவங்களை பதிவிட்டு வருகிறார் என சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

  மூக்கு மேல் முத்தம் கொடுத்த மேக்னா.. வாழ்க்கையே அழகு என உருகிய சிரு.. நெஞ்சைப் பிழியும் போட்டோ!மூக்கு மேல் முத்தம் கொடுத்த மேக்னா.. வாழ்க்கையே அழகு என உருகிய சிரு.. நெஞ்சைப் பிழியும் போட்டோ!

  மாங்காய்க்கு முத்தம்

  மாங்காய்க்கு முத்தம்

  லாக்டவுன் நேரத்தை தனது அம்மாவுடன் கேரளத்தில் செலவிட்டு வருகிறார் நடிகை அமலா பால். கடந்த ஏப்ரல் மாதத்தில் அங்கு பெய்த முதல் மழையை ரசித்தபடி தனது தோட்டத்தில் காய்த்த மாங்காய்களுக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாக்கினார்.

  புரியாத புதிர்

  புரியாத புதிர்

  பாலிவுட் பாடகர் பவ்நிந்தர் சிங்குடன் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், அவருடன் பர்தா அணிந்தபடி அமலா பால் ஊர் சுற்றிய புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. ஆனால், அது குறித்த எந்தவொரு விளக்கத்தையும் இதுவரை நடிகை அமலா பால் அளிக்காதது புரியாத புதிராகவே இருக்கிறது.

  மார்க்கெட் காலி

  மார்க்கெட் காலி

  மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் படு போல்டாக ஒட்டுத் துணி அணியாமல் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேலாக ஷூட்டிங் நடத்தி இந்திய சினிமாவையே காமினியாக திரும்பி பார்க்க வைத்த அமலா பாலுக்கு, அந்த படத்திற்கு பிறகு வேறு ஒரு முத்திரை குத்தப்பட்டு தமிழ் சினிமாவில் டோட்டலாக மார்க்கெட் காலியானது.

  தத்துவமாக பொழிகிறார்

  தத்துவமாக பொழிகிறார்

  இந்த லாக்டவுனில் நீங்க எந்த ஒரு புதிய விஷயத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்றாலும் கவலைப் படாதீங்க, இது ஒன்றும் எலி ரேஸ் கிடையாது. இந்த ஓய்வு நேரத்திலும் புரொடக்டிவ்விட்டி செய்ய உங்களை யாரும் கட்டாயப்படுத்த மாட்டார்கள், ஃப்ரீயா விடுங்க போன்ற பல தத்துவங்களை தனது இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார் அமலா பால்.

  வேட்டி சட்டையில்

  வேட்டி சட்டையில்

  லாக்டவுன் தளர்வு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு வரும் நிலையில், தனது சகோதரர்களுடன் கேரளாவில் வேட்டி, சட்டை அணிந்தபடி போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி இருந்தார் அமலா பால், அந்த புகைப்படத்தை பார்த்த பல பிரபலங்கள், வேட்டியில் செம அழகா இருக்கீங்க என புகழ்ந்து தள்ளினர்.

  அடுத்த தத்துவம்

  அடுத்த தத்துவம்

  தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் தத்துவங்களாக போட்டு தாக்கி வரும் நடிகை அமலா பால் தற்போது அடுத்த தத்துவம் ஒன்றை பதிவிட்டு நெட்டிசன்களை மண்டை காய வைத்துள்ளார். உங்கள் ஆன்மாவின் பரவசத்தை ருசி பார்த்துவிட்டால், அவர்களுடைய ஆன்மாவின் பரவச நிலையையும் அவர்கள் உணர்வார்கள். இல்லையென்றால், உங்களுடைய ஆன்மா அவர்களுக்கு ஒரு ஏலியனை போலவே தனித்து தெரியும் என தற்போது பதிவிட்டுள்ளார்.

  கலாய்க்கும் ரசிகர்கள்

  கலாய்க்கும் ரசிகர்கள்

  இந்த டிரெஸ்ல உங்க போட்டோ சூப்பரா இருக்கு, நீங்க ஒரு நல்ல நடிகைன்னு மதிக்கிறேன். ஆனால், உங்க வார்த்தைகள், டிரான்ஸ்லேட் பண்ண மாதிரி இருக்கு, ரொம்ப மொக்கை போடுறீங்களோன்னு நினைக்கிறேன், என்னாச்சு உங்களுக்கு, உங்களுக்காக நான் இருக்கிறேன் கவலைப் படாதீங்க என நெட்டிசன்கள் அமலா பாலை ட்ரோல் செய்து வருகின்றனர்.

  English summary
  Amala Paul latest tweet about Love, Alien and Soul message trolled by netizens. After her rumoured second marriage photos leaked Amala Paul start posting such kind of Philosophy posts.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X