ஸ்ட்ராப்லெஸ் உடையில் அமலா பால் தியானம்.. கூடவே போட்டோகிராஃபர் சுத்துவாரா என நெட்டிசன்கள் கலாய்!
சென்னை: சர்ச்சையான கதாபாத்திரங்களை சர்வ சாதாரணமாக எடுத்து நடித்து வரும் அமலா பால், தற்போது தியானம் செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தியானம் செய்யும் போது கூட ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து கவர்ச்சியாகத் தான் செய்வீர்களா என்றும், கூடவே போட்டோகிராஃபர் சுத்துவாரா என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து அமலா பாலை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
முன்னதாக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தியானம் செய்து வந்த அமலா பால், தற்போது ரிஷிகேஷில் உள்ள தியான மையத்தில் தியானம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை நாயகி
அமலா பாலின் அறிமுக படமான சிந்து சமவெளியில் ஆரம்பித்த சர்ச்சை அவரது ஆடை படத்தை தாண்டி சமீபத்தில் வெளியான பிட்ட கதலு வரை நீண்டு கொண்டே செல்கிறது. இயக்குநர் ஏ.எல். விஜய்யுடன் விவாகரத்து, இரண்டாவது திருமண சர்ச்சை என லிஸ்ட் ரொம்ப பெருசு.

ரசிகர்கள் குறைவு
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஹாட்டான போட்டோக்களையும், யோகா செய்யும் புகைப்படங்களையும் பதிவிட்டு வரும் நடிகை அமலா பாலுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 3.8 மில்லியன் ரசிகர்கள் தான் உள்ளனர். பல சின்னத்திரை நடிகைகளுக்கே இதை விட அதிக மில்லியன் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திடீர் தத்துவம்
ஏகப்பட்ட பிரச்சனைகளை வாழ்வில் சந்தித்து வரும் நடிகை அமலா பால் அவ்வப்போது திடீர் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தத்துவங்களை பேச ஆரம்பித்து விடுவார். கடந்த ஆண்டு லாக்டவுனில் பெண்கள் கருவை சுமக்கும் மெஷின்கள் அல்ல என ஓஷோவின் தத்துவத்தை குறிப்பிட்டு அவர் போட்ட போஸ்ட் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இமய மலையில் ஹோலி
கோலிவுட், டோலிவுட் என கலக்கி வரும் நடிகை அமலா பால், அடுத்ததாக சில பாலிவுட் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களிலும் கமீட் ஆகி உள்ளார். இந்நிலையில், ஹோலி பண்டிகையின் போது இமய மலைக்கு சென்ற அமலா பால் அங்கே தோழியுடன் ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கினார்.

ரிஷிகேஷில் தியானம்
இமய மலைக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ள நடிகை அமலா பால், தற்போது ரிஷிகேஷில் உள்ள ஒரு தியான மையத்தில் தியானம் செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், பிரார்த்தனை என்பது இறைவனிடம் நாம் பேசுவது, தியானம் என்பது நாம் கவனிப்பது என மீண்டும் ஒரு தத்துவ கேப்ஷனை போட்டுள்ளார்.

ஸ்ட்ராப்லெஸ் உடை
நடிகை அமலா பால் பச்சை நிற ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து கவர்ச்சி மிளிர தியானம் செய்யும் புகைப்படங்களை பதிவிட்ட நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்தும் அமலா பாலை ட்ரோல் செய்தும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். தியானம் செய்ய ஸ்ட்ராப்லெஸ் உடை தான் போடணுமா என்றும் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

போட்டோகிராஃபர் வைத்து
தியானம் செய்வது கவனிப்பது என பதிவிட்டு இருக்கும் நீங்க, கூடவே போட்டோகிராஃபரை கூட்டிக் கொண்டு சென்றால் எங்கே மன நிம்மதியுடன் தியானம் செய்ய முடியும் என்றும், அடுத்த ஹாட் போட்டோவை எப்போ போடுவீங்க என்றும் கமெண்ட்டுகளை தெறிக்க்விட்டு அமலா பாலை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











