இன்னைக்கு ஒரு புடி..ஸ்ருதி ஹாசன் பதிவை பார்த்து நக்கலடித்த நெட்டிசன்ஸ்!
சென்னை : கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசனின் பதிவை பார்த்த நெட்டிசன்ஸ் கிண்டலடித்து உள்ளனர்.
கமல் ஹாசனின் ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான் ஸ்ருதி.அப்பாவை போலவே பல திறமைகளை கொண்டவர்.
நடிகையாக மட்டும் இல்லாமல் பாடகி,பாடலாசிரியர்,நடனம் என்று அணைத்து துறையிலும் கைதேர்ந்தவராக உள்ளவராக உள்ளார்.

ஏழாம் அறிவு
கமல் ஹாசன் இயக்கி,தயாரித்த படமான ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ருதி ஹாசன்,தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் ஹிந்தி, தெலுங்கு என்று பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்,உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளிவந்த படமான ஏழாம் அறிவு என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.போதி தர்மர்,தீடிரென்று பரவும் வைரஸ் என்று கொண்டு செல்லப்பட்ட கதைக்களம், அப்போது பேசப்படவில்லை என்றாலும் கொரோனா வைரஸ் பரவிய போது, மக்களால் அதிக அளவு பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் கவனம்
தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் நடிக்க அதிகம் வாய்ப்பு கிடைத்த ஸ்ருதிக்கு வெற்றி படங்களும் தெலுங்கிலேயே அமைந்தது.அதனால் அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார்.அதன் பிறகு கிடைத்த வாய்ப்பு தான் 3 திரைப்படம் .இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதி ,சிவகார்த்திகேயன்,காப்ரில்லா போன்ற பலர் நடித்து இருந்தனர்.இந்த படம் ஸ்ருதியின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்காக அமைந்தது.

பல சறுக்கல்கள்
அணைத்து மொழியிலும் கவனம் செலுத்துவதால் தானோ என்னமோ, தமிழில் நிலையான வெற்றி பெறவே முடியவில்லை.3 படத்திற்கு பிறகு பூஜை, புலி, வேதாளம், சிங்கம்3, லாபம் என்று பல படங்களில் நடித்துள்ளார்.ஆனால் எதுவும் சொல்லும் அளவுக்கு இல்லை.தற்போது சலார் என்ற தெலுங்கு படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் .பல சறுக்கல்களை சந்தித்த ஸ்ருதி ஒரு நடிகையாக, நிலையான வெற்றி பெற போராடி கொண்டு தான் இருக்கிறார்.

கேலியான புகைப்படம்
எப்போதும் சமூகவலைத்தளத்தில் தனது அன்றாட நிகழ்வுகளை பதிவிடும் ஸ்ருதி ஹாசன்,சமீபத்தில் தன் காதலர் சாந்தனு ஹசாரிக்காவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகிக்கொண்டு இருக்கின்றது.அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் கேலி செய்தும் வருகின்றனர்.ஏம்மா உங்க அப்பா நல்ல மாப்பிளைய பாத்து வைக்க மாட்டாரா,ஏன் இப்படி? என்று கேலியாக கேட்டதுடன்,இதுவும் கடந்து போகும்,இன்னைக்கு ஒரு புடி என்று நக்களாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











