ஷிவானி காலுக்கு என்ன ஆச்சு? இப்படி நடக்குறாரே என கலாய்க்கும் நெட்டிசன்கள்.. எல்லாம் புஷ்பா ஃபீவர்!
சென்னை: ஷிவானி நாராயணன் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரது காலுக்கு என்ன ஆச்சு என கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணனுக்கு இன்ஸ்டாகிராமில் 3.2 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
சினிமாவில் பிசியாகி உள்ள அவர் எப்போதாவது தான் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சினிமாவில் பிசி
பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கம் தலைகாட்டுவதே அரிதாகி விட்டது. அந்த அளவுக்கு 3 படங்களில் நடித்து வருகிறார் ஷிவானி நாராயணன். ஆனாலும், தனது 32 லட்சம் இன்ஸ்டாகிராம் குடும்பத்தை அப்படியே ஏங்க வைத்து விடக் கூடாது என்பதற்காக அடிக்கடி புகைப்படங்களையும் வீடியோக்களையும் கிடைக்கும் சின்ன கேப்பில் போட்டு வருகிறார்.

டான்ஸ்னா உயிர்
நடிகை ஷிவானி நாராயணனுக்கு டான்ஸ் ஆடுவது என்றால் உயிர் என்றே சொல்லலாம். இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட நடனம் ஆடும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் ஷிவானி. இந்நிலையில், லேட்டஸ்ட்டாக அவர் ஆடிய நடன வீடியோவை நெட்டிசன்கள் சிலர் கலாய்த்து வருகின்றனர்.

காலுக்கு என்ன ஆச்சு
ஷிவானி நாராயணன் தற்போது ஷேர் செய்துள்ள நடன வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஹார்ட்டின்களை அள்ளிக் கொடுத்து வரும் நிலையில், சில நெட்டிசன்கள் ஷிவானி உங்க காலுக்கு என்ன ஆச்சு என நக்கல் அடித்து வருகின்றனர். அதற்கு காரணம் அவர் ஆடிய அந்த பாடல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா ஃபீவர்
அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் வெளியாகி 65 நாட்களுக்கு மேல் கடந்த நிலையில், தற்போது தான் அந்த அந்த படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடலுக்கு அல்லு அர்ஜுன் போலவே காலை ஒரு பக்கம் நகர்த்தி ஷிவானி நடனமாடி உள்ளார். அதனால் தான் நெட்டிசன்கள் இப்படி அவரை கலாய்த்து வருகின்றனர். லேட்டாக இந்த பாடலுக்கு நடனமாடினாலும், புஷ்பா இன்னமும் டிரெண்டிங்கில் இருப்பதால் இந்த நடன வீடியோவை வெளியிட்டுள்ளேன் என புஷ்பா குழுவுக்கும் பெரிய ஐஸ் வைத்துள்ளார்.

மூன்று படங்கள்
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம், ஆர்ஜே பாலாஜியுடன் ஒரு படம் மற்றும் நடிகர் வெற்றியுடன் பம்பர் என மொத்தம் 3 படங்களில் நடித்து வருகிறார் ஷிவானி நாராயணன். இந்த 3 படங்களும் இந்த ஆண்டே வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில படங்களும் ஷிவானி நாராயணன் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனவாம்.


Click it and Unblock the Notifications











