ஸ்விம் சூட்டுக்கு எதுக்குமா கோட்டு.. தனுஷ் ஹீரோயினை தரமா கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் வெளியிட்டுள்ள ஸ்விம் சூட் புகைப்படத்தை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் நெப்போடிசம் தொடர்பான சர்ச்சைகள் பெருகி உள்ளன.

வாரிசு நடிகைகளான சோனம் கபூர் மற்றும் ஆலியா பட் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பல பாலிவுட் ரசிகர்கள் அன்ஃபாலோ செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் ஜோடி

தனுஷ் ஜோடி

பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான படம் ராஞ்சனா. தமிழில் அந்த படம் அம்பிகாபதி என்ற பெயரில் டப் செய்யப்பட்டது வெளியானது. 100 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டிய தனுஷின் முதல் படம் என்ற பெருமையை பெற்ற இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார்.

அனில் கபூரின் மகள்

அனில் கபூரின் மகள்

பாலிவுட்டில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவுக்கு பிறகு நெப்போடிசம் தொடர்பான சர்ச்சைகள் பூதாகரமாக வெடித்து வருகின்றன. ஸ்லம் டாக் மில்லியனர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் தான் சோனம் கபூர். வாரிசு நடிகை என்பதால், எளிதில் ஹீரோயின் ஆனார் என்ற குற்றச்சாட்டுகள் தற்போது இவருக்கு எதிராக கிளம்பி உள்ளன.

லெஸ்பினாக நடித்ததால்

லெஸ்பினாக நடித்ததால்

கடந்த ஆண்டு வெளியான ஏக் லட்கி கோ தேகா தோ ஐசா லகா எனும் படத்தில் லெஸ்பியனாக நடித்து மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தார் நடிகை சோனம் கபூர். இந்த படத்தில் அவருக்கு இணையாக தென்னிந்திய நடிகை ரெஜினா கஸாண்ட்ராவும் லெஸ்பியனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு சோனம் கபூரின் மார்க்கெட் மிகப்பெரிய சரிவு சந்தித்துள்ளது.

கவர்ச்சி காட்டினால்தான்

கவர்ச்சி காட்டினால்தான்

பாலிவுட்டில் மார்க்கெட் சரிவு, ரசிகர்களும், நெப்போடிச நடிகை என்ற பச்சைக் குத்தி இன்ஸ்டாவை விட்டு தெறித்து ஓடி வருகின்றனர். இந்நிலையில், கவர்ச்சியை காட்டினால் தான் பிழைப்பு நடத்த முடியும் என முடிவு கட்டிய இவர், சமீப காலமாக படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

பங்கம் பண்ணும் ரசிகர்கள்

பங்கம் பண்ணும் ரசிகர்கள்

சுமார் 30 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகை சோனம் கபூர், தற்போது ஸ்விம் சூட் உடையில் செம செக்ஸியாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார். ஆனால், சில நெட்டிசன்கள் ஸ்விம் சூட்டுக்கு எதுக்குமா கோட்டு என்று இவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

புறக்கணிப்போம்

புறக்கணிப்போம்

பாலிவுட் சினிமா உலகில் உங்க படங்கள் எல்லாம் இனிமே ஓடாது என்றும், வாரிசு நடிகர்களை உண்மையான ரசிகர்கள் புறக்கணிப்பார்கள் என்றும், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு நீதி கேட்டு வரும் ரசிகர்களும் இவரை திட்டித் தீர்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர். முன்னதாக, காபி வித் கரண் நிகழ்ச்சியில், சுஷாந்த் சிங் என்றால் யாரென்றே தனக்கு தெரியாது என இவர் கூறியதால், தான் ரசிகர்கள் இந்தளவுக்கு இவர் மீது கோபத்தை காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X