Sugar Baby ஆக மாறிய த்ரிஷா.. மணிரத்னம் பண்ண தக் லைஃப் சம்பவம்.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை: இந்த ஆண்டு இளம் நடிகைகளை விட அதிக படங்களில் கமிட்டாகி நடித்து வருவது யாரென்றால், அது வேற யாருமில்லை நம்ம தலைவி த்ரிஷா தான். லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என நயன்தாரா தூக்கிப் போட காரணமே தமிழ் சினிமாவில் அவருக்கு எந்தவொரு முன்னணி நடிகர்களுடனும் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போன விரக்தி தான் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து மீண்டும் தனது ராஜ்ஜியத்தை தமிழ் சினிமாவில் பிடித்துவிட்டார் த்ரிஷா என்கின்றனர். விஜய்யுடன் லியோ, கோட் படத்தில் ஒரு குத்தாட்டம் என போட்ட த்ரிஷா இந்த ஆண்டு அஜித் குமாருடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என மிரட்டி விட்டார்.

Netizens trolled Trisha after Thug Life second single Sugar Baby update arrived

அடுத்து வரும் ஜூன் 5ம் தேதி கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுக்கு அபிராமி ஜோடி என்றும் சிம்புவுக்கு த்ரிஷா என்றும் ரசிகர்கள் மனப்பால் குடித்துக் கொண்டிருந்த நிலையில், சுகர் பேபியாக த்ரிஷாவை மாற்றிவிட்டார் மணிரத்னம். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள செகண்ட் சிங்கிளான 'சுகர் பேபி' வரும் மே 21ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் அறிவிப்பு போஸ்டர் வந்ததில் இருந்தே சோஷியல் மீடியாவில் த்ரிஷா குறித்த மீம்களும் ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

42 வயதிலும் நம்பர் ஒன்: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டும் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. ஜனவரி மாதம் 2ம் தேதியே டொவினோ தாமஸ் உடன் இணைந்து நடித்த ஐடென்ட்டிட்டி படம் வெளியானது. பிப்ரவரி மாதம் 6ம் தேதி அஜித் குமாருடன் இணைந்து நடித்த விடாமுயற்சி திரைப்படம் வெளியாக, ஏப்ரல் 10ம் தேதி மீண்டும் அஜித் குமாருடன் குட் பேட் அக்லி படத்தில் செம சூப்பரான கதாபாத்திரத்தில் த்ரிஷா கலக்கியிருந்தார். ஜூன் 5ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகும் தக் லைஃப் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் த்ரிஷா இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் 45வது படத்திலும் நடித்து வருகிறார். மேலும், சிரஞ்சீவியுடன் அவர் நடித்துள்ள விஸ்வம்பரா திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாக காத்திருக்கிறது.

சுகர் பேபி: தக் லைஃப் படத்தின் முதல் பாடலை கமல்ஹாசன் எழுதியிருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான ஜிங்குச்சா பாடல் சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ரீல்ஸ்களாக டிரெண்டாகி வருகின்றன. "பொண்டாட்டி தாசனாகவே மாறுவான்" என்கிற வரிகளுக்கு பல பெண்கள் தங்கள் கணவன்மார்களை வேலை செய்ய வைத்து ரீல்ஸ் போட்டு வருகின்றனர். இந்நிலையில், தக் லைஃப் படத்தின் செகண்ட் சிங்கிளான 'சுகர் பேபி' பாடல் நாளை வெளியாகிறது என்கிற அறிவிப்பை நேற்று இரவு ராஜ்கமல் நிறுவனம் வெளியிட சோஷியல் மீடியா முழுவதும் த்ரிஷா பற்றிய ட்ரோல்களும் மீம்களும் டிரெண்டாகி வருகின்றன.

Netizens trolled Trisha after Thug Life second single Sugar Baby update arrived

சிம்புவுக்கு சித்தி: சுகர் பேபி என்றால் இளமையான பெண் பணத்துக்காக வயதான பணக்காரர்களுடன் கள்ளத்தனமான உறவில் ஈடுபடுபவர் எனக் கூறுகின்றனர். தக் லைஃப் டிரைலரில் கமல்ஹாசன், "மேடம் ஐ எம் யுவர் ஒன்லி ஆடம்" என காம வார்த்தைகளை சொல்வதை பார்த்தே ரசிகர்கள் காண்டாகிவிட்டனர். அப்போ த்ரிஷா இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடி இல்லையா? சித்தியா என ட்ரோல் செய்து வருகின்றனர்.

குவியும் மீம்ஸ்: குட் பேட் அக்லி படத்திலேயே அஜித் குமார் த்ரிஷாவை பார்த்து "கொலையும் செய்வாள் பத்தினி" என்றும் "எந்த பொண்டாட்டிடா புருஷனோட 100 வருஷம் வாழணும்னு ஆசைப்படுவா" என்றெல்லாம் வசனம் பேசியிருப்பார். இப்போ மணிரத்னம், செக்கச் சிவந்த வானம் படத்தில் அதிதி ராவுக்கு கொடுத்த ரோல் போல த்ரிஷாவுக்கு கொடுத்ததை பார்த்து 'சுகர் பேபி' த்ரிஷா என பல மீம்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

FAQs
மணிரத்னம் இயக்கத்தில் த்ரிஷா இதுவரை எத்தனை படங்களில் நடித்துள்ளார்?

மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 படங்களைத் தொடர்ந்து தக் லைஃப் படத்திலும் த்ரிஷா நடித்துள்ளார். மொத்தமாக 4 படங்கள். 

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X