நீயெல்லாம் எதுக்கு நடிக்க வந்த.. நடிக்கவே தெரியல? வனிதாவை வம்பு இழுத்த நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி, நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் ஜீலை 18ந் தேதி தியேட்டரில் வெளியானது. இந்த படத்தில், வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர், ஷகிலா, செஃப் தாமு, பாத்திமா பாபு, கிரண், ஸ்ரீமான், ஆர்த்தி, கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தியேட்டரில் வெளியான இந்த படத்தை பார்த்த பலர், படம் 18 பிளஸ் படமாக இருந்தாலும், அனைத்து விஷயத்தையும் ரொம்ப வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள் என்றனர். அதேபோல படம் பார்த்த பயில்வான் ரங்கநாதன், படம் முழுக்க ஓவர் கசமுசா, படத்தில் மேட்டர் தான் இருக்கு என கடுமையாக படத்தை விமர்சித்து இருந்தார்.
படம் மோசமான விமர்சனத்தை பெற்ற நிலையில், படம் வெளியான அன்றே, அந்த படத்தில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் 'சிவராத்திரி தூக்கம் ஏது' பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக இசைஞானி இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு பதிலளித்த வனிதா இந்த பாடலை சோனி மியூசிக்கிடம் இருந்து வாங்கியதாகவும், அதுமட்டுமல்லாமல் இளையராஜா அவர்களை சந்தித்து ஆசி பெற்ற போது, பாடல் குறித்து பேசினேன். அப்போது அவர் ஓகே என்றார். ஆனால், இப்போது இளையராஜா வேண்டுமென்றே தன் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். நான் அந்த வீட்டிற்காக கடுமையாக உழைத்து இருக்கிறேன். நான் அந்த வீட்டு பொண்ணு, மருமகளாக வேண்டியது என பேட்டியில் கண்ணீர்விட்டு பேசி இருந்தார்.

வனிதா விஜயகுமார்: இப்படி ஒரு பஞ்சாயத்து நடந்து கொண்டு இருக்க இந்த திரைப்படத்தை வனிதா விஜயகுமார் அவர்கள் நேரடியாக தன்னுடைய youtube சேனலில் வெளியிட்டார். ஜூலை 18ந் தேதி காலை 10.30 மணியளவில் யூடியூப் சேனலில் படத்தை வெளியிடுவதாக அறிவிப்பை வெளியிட்டார். தியேட்டரில் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்காததால் அதனை யூடியூப்பில் காசு கட்டி பார்க்கும் படி வெளியிட்டார். தியேட்டரில் படம் ஜூலை 11ந் தேதி வெளியான நிலையில், ஜூலை 18ந் தேதி அதாவது படம் வெளியாகி ஒரே வாரத்தில் படத்தை வனிதா தனது சேனலில் வெளியிட்டார். படத்தை பார்த்த பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நடிக்கவே தெரியல: இந்நிலையில், வனிதா விஜய்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் இருந்து காதல் நீயே என்ற பாடலை வெளியிட்டுள்ளார். அந்த பாடலில் கர்ப்பிணியாக இருக்கும் வனிதா சிவப்பு உடையில் அழுது கொண்டே பாடுவது போல பாடல் வருகிறது. அந்த பாடலைப் பார்த்த இணையவாசிகள் வனிதா, வச்சி செய்து வருகின்றனர். ஒரு இணையவாசி நல்லா வாய் விட்டு பாடியிருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்றும், மற்றொருவர், சண்டை போடத்தான் தெரியும், நடிக்க தெரியாத, ஒழுங்கா லிப் சிங் கூட பண்ணத் தெரியல, அந்த படத்திற்கு வேறு யாரையாவது ஹீரோயினா போட்டு படம் எடுத்து இருக்கலாம், எதற்கு இந்த தேவையில்லாத வேலை என வனிதாவை வம்பு இழுத்து ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











