கொரோனாவிடம் கெஞ்சும் வரலக்‌ஷ்மி.. அடுத்த முதல்வர் நீங்கதான்னு ரசிகர்கள் செம கலாய்!

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஷூட்டிங் இல்லாமல் போர் அடிப்பதாக நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

VaraLakshmi Angry Speech | Nakkul Blasts Loosaஆ DA நீங்க | Sarathkumar Awarness

நடிகர் சரத்குமாரின் மகளான வரலக்‌ஷ்மி சரத்குமார், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் வரலக்‌ஷ்மி சரத்குமார், விஷாலின் சண்டக்கோழி 2 மற்றும் விஜய்யின் சர்கார் படங்களில் மிரட்டும் வில்லியாக நடித்து அசத்தினார்.

வெல்வெட் நகரம்

வெல்வெட் நகரம்

லாக் டவுனுக்கு முன்னதாக மனோஜ் குமார் நடராஜன் இயக்கத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிப்பில் வெளியான வெல்வட் நகரம் படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. மேலும், படம் வெளியான வெகுவிரைவிலேயே கொரோனா பாதிப்பு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு, மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது.

கொரோனாவிடம் கெஞ்சல்

இந்நிலையில், ஷூட்டிங் இல்லாமல் வீட்டிலேயே இருப்பது ரொம்ப போர் அடிக்குது என்றும், கொரோனா சீக்கிரம் போய்விடு கொரோனா ப்ளீஸ் என ரொம்ப ஃபீல் பண்ணி கொரோனாவிடம் கெஞ்சும் விதமாக நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் போட்டுள்ள ட்வீட்டுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கலாய்த்து கமெண்ட் செய்துள்ளனர்.

அடங்கவே மாட்டியா

வீட்டில் பத்திரமாக இருங்க வரலக்‌ஷ்மி, என அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி வரும் நிலையில், சில நெட்டிசன்கள், ஏன் மா நீ வீட்டுல அடங்கி உட்காரவே மாட்டியா என பங்கமாக கலாய்த்தும் வருகின்றனர். மேலும், சிலர் பட வாய்ப்புகளே இல்லை எந்த ஷூட்டிங் என்றும் கிண்டலடித்துள்ளனர்.

தமிழ்நாடு முதல்வர்

என் வரு செல்லம் சொன்னா கொரோனா அப்படியே ஓடிப் போயிடும் என்றும், உலகம் கவனிக்க மறந்த அழகி நீங்கள் என்றும் சில அதி தீவிர ரசிகர்கள் வரலக்‌ஷ்மியை வர்ணித்து தள்ளும் நிலையில், ஒரு நெட்டிசன் ஒரு படி மேல் சென்று, வருங்கால தமிழ்நாடு முதல்வர் நீங்க தான்னு கமெண்ட் போட்டிருக்கார். இன்னும் சர்கார் படத்துல இருந்து வெளிய வரலை போல..

என்ன படம்?

அக்கா அப்படியே என்ன படம்னு சொல்லிடுங்க ஒரு ஃபேன் மேட் போஸ்டர் ரெடி பண்ணிடுறேன்னு இந்த குசும்புக்கார நெட்டிசன் பங்கமாக வைத்து கலாய்த்துள்ளார். கடந்த ஆண்டு வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிப்பில் தமிழில் பெரிதாக ஒரு படமும் வரவில்லை. இந்த ஆண்டு வெளியான வெல்வெட் நகரமும் படு தோல்வி என்பதால் இப்படி கலாய்க்கின்றனர்.

கொரோனா கூட

பல முன்னணி ஹீரோயின்களே வீட்டில் இருக்கும் நேரத்தை உபயோகமாக கழித்து வரும் நிலையில், ஷூட்டிங் இல்லாமல் போரடிக்குதுன்னு வரலக்‌ஷ்மி சொன்னதை கேட்டு பல ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து கமெண்ட் செய்துள்ளனர். இந்த நெட்டிசன், என்ன கொரோனா கிட்டலாம் பேசுறீங்க என போட்டோ மீம் போட்டு வெறுப்பேற்றியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X