For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வாய் ஏன் அவ்வளவு கோணையா போகுது.. ஓஹோ இதுதான் கேஷுவல் போஸா.. ஷிவானியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

  |

  சென்னை: சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து விட்ட ஷிவானி நாராயணன் சன்டே அதுவுமா ஷேர் செய்துள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

  செம க்யூட்டாகவோ அல்லது படு ஹாட்டாகவோ போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைக்கும் ஷிவானி நாராயணன் சில நாட்களாகவே அடக்கி வாசித்து வருகிறார் என்கிற விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

  இந்நிலையில், டோனட்ஸ் சாப்பிட இத்தனை கோணல் போஸ் தேவையாம்மா என நெட்டிசன்கள் ஜாலியாக கிண்டல் செய்துள்ளனர்.

  கிராக்கி அதிகமாகிடுச்சு.. ஹீரோக்கு நிகரா சம்பளம் கொடுத்தா வரேன்னு அடம்பிடிக்கும் வெரைட்டி நடிகர்! கிராக்கி அதிகமாகிடுச்சு.. ஹீரோக்கு நிகரா சம்பளம் கொடுத்தா வரேன்னு அடம்பிடிக்கும் வெரைட்டி நடிகர்!

  ஷிவானி

  ஷிவானி

  இன்ஸ்டாகிராமில் தினமும் போட்டோக்களை போட்டு மில்லியன் கணக்கான ரசிகர்களை சேர்த்து வைத்த சீரியல் நடிகை ஷிவானி நாராயணனை அப்படியே பிக் பாஸ் வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு வந்து ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தனர். ரசிகர்களை தாண்டி ஏகப்பட்ட பிரபலங்களே ஷிவானியின் அழகில் மயங்கி விழுந்து பரம விசிறிகளாக மாறிவிட்டனர். பிக் பாஸ் முடிந்த கையோடு ஷிவானிக்கு சினிமாவில் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

  விஜய்சேதுபதிக்கு ஜோடியாக

  விஜய்சேதுபதிக்கு ஜோடியாக

  முதல் படத்திலேயே விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் சூப்பர் வாய்ப்பு கிடைத்த நிலையில், வேண்டாம் என்றா சொல்வார் ஷிவானி ஒரு சில சீன்கள் என்றாலும், நோ சொல்லாமல் கமலுக்காக நடித்துக் கொடுத்து சென்றுள்ளார். விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஷிவானி, ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விஷேம் படத்தில் ஒரு பாடலுக்கே அழகாக நடனம் ஆடி ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

  நாய்சேகர் நாயகி

  நாய்சேகர் நாயகி

  இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து வரும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மைசூர் அரண்மனையில் நடந்து முடிந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் வடிவேலு அருகே ஷிவானி அமர்ந்து கொடுத்த போஸ் வேறலெவலில் டிரெண்டானது. சினிமாவில் பிசியாக இருப்பதால் இப்போதெல்லாம் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கம் அவர் வருவதே இல்லை.

  டோனட்ஸ் சாப்பிடும் ஷிவானி

  டோனட்ஸ் சாப்பிடும் ஷிவானி

  கோயம்பத்தூரில் உள்ள தி ரெசிடன்ஸி டவரில் நடிகை ஷிவானி நாராயணன் டோனட்ஸ் சாப்பிடும் போட்டோக்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். மேக்கப், ஃபில்டர் என எதுவுமே இல்லாமல், செம கேஷுவலாக ஷிவானி போஸ் கொடுத்துள்ள அந்த போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிகிறது. அதே சமயம் சில நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்தும் வருகின்றனர்.

  மூஞ்சி ஏன் அப்படி இருக்கு

  மூஞ்சி ஏன் அப்படி இருக்கு

  ஷிவானி டோனட்ஸ் சாப்பிடுவது அழகாக இருந்தால் ஜொள்ளு விட்டு ரசித்து இருப்பார்கள். ஆனால், எக்ஸ்பிரஷன் கொடுக்கிறேன் என்கிற பெயரில் அவர் செய்த அஷ்ட கோணலை பார்த்த நெட்டிசன்கள் வாய் ஏன் அந்த கோணலா போகுது என்றும், மூஞ்சி ஏன் அப்படி இருக்கு என்றும் கமெண்ட் போட்டு கதற விட்டு வருகின்றனர். சமீபத்தில் பம்பர் எனும் படத்தின் டப்பிங் பணியை முடித்த ஷிவானி நாராயணன் அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

  பொன்ராம் படம் என்ன ஆச்சு

  பொன்ராம் படம் என்ன ஆச்சு

  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, ஷிவானி நாராயணன், அனு க்ரித்தி வாஸ், புகழ் நடிப்பில் இயக்குநர் பொன்ராம் இயக்கி வந்த விஜய்சேதுபதியின் 46வது படம் என்ன ஆனது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அந்த படத்தில் ஷிவானி நாராயணன் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Shivani Narayanan shares recent donuts eating photos on Sunday evening in her instagram page getting likes and mixed comments.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X