காபி குடிக்க ஏன்மா இத்தனை ரியாக்‌ஷன்.. ஷிவானி நாராயணனை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை: தொடர்ந்து குவியும் பெரிய பட வாய்ப்புகளால் ரொம்பவே பூரித்து போய் விட்டார் நடிகை ஷிவானி நாராயணன்.

சினிமா ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது தனது ரசிகர்களை குஷிப்படுத்த இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ஃபேவரைட் ஸ்பாட்டான குண்டு பல்பு பக்கத்தில் இருந்தபடி எடுத்த போட்டோக்களை போட்டு வருகிறார்.

இந்நிலையில், காபி குடிக்கும் போட்டோக்களை ஷேர் செய்துள்ள ஷிவானியை நெட்டிசன்கள் சிலர் பங்கமாக கலாய்த்துள்ளனர்.

ஒரே பூரிப்பு

ஒரே பூரிப்பு

எடையை குறைத்து சினிமா பட வாய்ப்புகளுக்காக சிக்கென ஸ்லிம்மாக இருந்த ஷிவானி நாராயணன் மீண்டும் பழையபடி வெயிட் போட்டு புசுபுசுன்னு ஆகி விட்டார் என அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிவதால் வந்த பூரிப்பு இது என்கின்றனர்.

விஜய்சேதுபதி டு வடிவேலு

விஜய்சேதுபதி டு வடிவேலு

பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் நடிக்க ஒப்பந்தமான பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் வெற்றியுடன் பம்பர் படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜியுடன் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். எல்லாவற்றையும் விட நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவுடன் ஜோடி போட்டு அசத்த உள்ளார்.

இன்ஸ்டா பக்கமும்

இன்ஸ்டா பக்கமும்

கோடம்பாக்கத்தில் இளம் நடிகையாக அறிமுகமாகி உள்ள ஷிவானி நாராயணன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்காக எப்போதுமே காத்துக் கிடக்கும் 3 மில்லியன் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக வித விதமாக கவர்ச்சி போட்டோக்களை போட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

கோல்ட் காபி

கோல்ட் காபி

இந்நிலையில், சமீபத்தில் ரெஸ்டரன்ட் ஒன்றில் கோல்ட் காபி குடிக்கும் போது விதவிதமாக கொடுத்த எக்ஸ்பிரஷன்களின் போட்டோக்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகிறார் ஷிவானி நாராயணன். ஸ்ட்ரா போட்டு காபியை உறிகிறாரா அல்லது இளைஞர்களின் இதயத்தை உறிகிறாரா என்றே தெரியவில்லை என அவரது ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

என்ன ரியாக்‌ஷன் இது

என்ன ரியாக்‌ஷன் இது

கோல்ட் காபி தான குடிக்கிறீங்க அதுக்கு ஏன் முகத்தை அப்படி வச்சு போஸ் கொடுக்குறீங்க என சில நெட்டிசன்கள் ஷிவானியின் கமெண்ட் பக்கத்தில் வம்படியாக வந்து வம்பிழுத்து வருகின்றனர். காபி குடிக்கிறதுக்கெல்லாம் எதுக்குமா இப்படியொரு ரியாக்‌ஷன் கொடுக்குறீங்க? என்றும் காபில சக்கரைக்கு பதிலா உப்பு போட்டுட்டாங்களா என்றும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Recommended Video

அரபிக் இசைக்கு சூப்பர் குத்தாட்டம்... அள்ளும் அழகு... குஷியான ரசிகர்கள்!
ஃபிட்னஸ் முக்கியம்

ஃபிட்னஸ் முக்கியம்

மேலும், சில நெட்டிசன்கள் உடற்பயிற்ச்சி எல்லாம் செய்து செம ஃபிட்டாக அழகாக இருந்தீங்க, இப்போ இஷ்டத்துக்கு சாப்பிட்டு உடம்பு வெயிட் போட்டுட்ட மாதிரி இருக்கே.. ஃபிட்னஸ் முக்கியம் பிக் பாஸ் ஷிவானி என அட்வைஸ் சொல்லும் வகையிலும் கலாய்த்து வருகின்றனர். ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தனக்கு பிடிச்சதை பிடித்த படி செய்து வரும் ஷிவானியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X