என்னது இது.. பிள்ளைங்களையும் கெடுத்துடாதீங்க.. வாயோடு வாய் வைத்த வனிதாவுக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்!

சென்னை: மகளின் வாயோடு வாய் வைத்து போட்டோ ஷேர் செய்த வனிதாவை நெட்சன்கள் விளாசி வருகின்றனர்.

நடிகை வனிதா விஜயகுமார் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார். இரண்டு திருமணம் செய்த வனிதாவுக்கு இரண்டு திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.

முதல் கணவருடன் ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகளை பெற்ற வனிதா, இரண்டாவது கணவருடன் ஒரு பெண் குழந்தையை பெற்றார்.

டான்ஸ் மாஸ்டருடன் காதல்

டான்ஸ் மாஸ்டருடன் காதல்

விவாகரத்துக்கு பிறகு தனியாக வசித்து வந்த வனிதா டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் காதல் உறவில் இருந்தார். ஆனால் அந்த காதலும் பாதியிலேயே முறிந்து தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார் வனிதா.

பிக்பாஸ் சீசன் 3 ல் பங்கேற்ற வனிதா

பிக்பாஸ் சீசன் 3 ல் பங்கேற்ற வனிதா

இந்த நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் சகப் போட்டியாளர்களுடன் சண்டை சச்சரவு என ஏகப்பட்ட கன்டென்ட்டுகளை கொடுத்தார் வனிதா. வனிதா போட்ட சண்டையை பார்த்து சமூக வலைதளங்களில் அவரை சண்டைக் கோழி என விளாசினர் நெட்டிசன்கள்.

விஜய் டிவி குக் வித் கோமாளி

விஜய் டிவி குக் வித் கோமாளி

வனிதாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதாவுக்கு, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

குக் வித் கோமாளி - டைட்டில் வின்னர்

குக் வித் கோமாளி - டைட்டில் வின்னர்

இதில் டைட்டில் வின்னரானார் வனிதா. தொடர்ந்து சமையலுக்கான யூட்யூப் சேனலை தொடங்கினார் வனிதா. அதில் எடிட்டராக பணிபுரிந்த பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார். ஆனால் நான்கு மாதங்களிலேயே அந்த திருமணம் முடிவுக்கு வந்தது.

பீட்டர் பாலுடன் திருமணம் - பிரிவு

பீட்டர் பாலுடன் திருமணம் - பிரிவு

பீட்டர் பால் குடிக்கு அடிமையானதால் அவரையும் பிரிந்தார் வனிதா. தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளிலும் சினிமாவிலும் பிஸியாக உள்ளார் வனிதா. அவரது நடிப்பில் சில படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. கொடூரன், பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார் வனிதா.

வனிதா மகள் ஜோவிகா பிறந்த நாள்

வனிதா மகள் ஜோவிகா பிறந்த நாள்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள வனிதா, தனது போட்டோக்களை அவ்வப்போது ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது மகளுடன் எடுத்த போட்டோ ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார் வனிதா. அதாவது வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா அண்மையில் பிறந்த நாளை கொண்டாடினார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாட்டம்

ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாட்டம்

வனிதா நடிக்கும் பிக்கப் டிராப் படத்தின் செட்டில் யூனிட்டுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது வனிதா ஜோவிகாவின் வாயோடு வாய் வைத்து கேக்கை ஊட்டினார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன போட்டோ என்று அவரை விளாசியுள்ளனர்.

பிள்ளைகளையும் கெடுத்து விடாதீர்கள்

பிள்ளைகளையும் கெடுத்து விடாதீர்கள்

மேலும் பிள்ளைகளையும் கெடுத்து விடாதீர்கள் என்றும் தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் பலரும் வனிதாவுக்கும் அவரது மகளுக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். வனிதாவுக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதல் ஆளாய் குரல் கொடுத்து வருகிறார் ஜோவிகா.

மூன்றாவது திருமணத்திற்கு ஆதரவு

மூன்றாவது திருமணத்திற்கு ஆதரவு

சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறிய போது கூட அவருக்கு ஆதரவாக பேசினார். ரம்யா கிருஷ்ணன் செய்தது தவறு என்பதை போல பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். வனிதா பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்த போதும் கூட தனது அம்மாவுக்கு ஆதரவாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X