நடிகைகளை நிர்வாணமாக பார்க்க ஆசைப்படும் இளைஞர்கள்.. ஒரு செகண்டில் உள்ளாடைக்கு மாற்றும் GROK.. கேவலம்

சென்னை: ட்விட்டரை வாங்கி எக்ஸ் என பெயர் சூட்டி நடத்தி வரும் எலான் மஸ்க் அதில், GROK எனும் ஏஐ ஆப்ஷனை வைத்து இளைஞர்களை மொத்தமாக கெடுத்து வருகிறார். செயற்கை நுண்ணறிவை வைத்து உபயோகமாக பயன்படுத்தாமல் நடிகைகள் மற்றும் பெண்களை நிர்வாணமாக பார்க்கவே தொடர்ந்து உலகளவில் பலரும் க்ரோக்கை பயன்படுத்தி வருகின்றனர்.

நன்கு படித்து கணினி, ஸ்மார்ட்போன், சோஷியல் மீடியாவை கையாள தெரிந்தவர்களே இப்படி ஆடை குறைப்பு விஷயத்திலேயே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Netizens using GROK Ai is a stripper and pours plenty of Actress bikini pics without their concern
Photo Credit:

நடிகை மாளவிகா மோகனனின் புகைப்படத்தை பதிவிட்டு சில ரசிகர்கள் இவரை பிகினி உடையில் காட்டு என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வரும் நிலையில், நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது என்று எலான் மஸ்க்கிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நொடியில் பிகினி போட்டோ: முழுதாக ஹிஜாப் போட்டு இருக்கும் பெண்களின் புகைப்படங்களை கூட மினி பிகினியில் மாற்றிக் கொடு என நெட்டிசன்கள் கேட்ட உடனே க்ரோக் ஏஐ அதற்காகவே தான் உருவாக்கப்பட்டதை போல பெண்களை அவர்கள் அனுமதியில்லாமல் பிகினி உடையில் மாற்றிய புகைப்படங்களை நொடிப் பொழுதில் கொடுத்து வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் பல இளம் பெண்களே தங்களை பிகினியில் காட்டு எனக் கேட்க உடனடியாக அவர்களை GROK பிகினி உடையில் மாற்றிய போட்டோவை வழங்குகிறது.

நிர்வாணமாக பார்க்க ஆசைப்படும் இளைஞர்கள்: பிகினி உடையில் க்ரோக் மாற்றிய போட்டோவுக்கு கீழே இளைஞர்கள் குவிந்து நிர்வாணமாக காட்டு, அந்த பெண்ணை ஆடையில்லாமல் காட்டு, டிரான்ஸ்பரன்ட் பிகினியில் காட்டு என கமெண்ட் போட்டு வருகின்றனர். ஆனால், நிர்வாண புகைப்படங்களை மட்டும் க்ரோக் காட்டுவதில்லை. க்ரோக் காட்டவில்லை என்றாலும் பல டீப் ஃபேக் ஏஐ வெப்சைட்டுகள் பெண்களை முழு நிர்வாணமாக மாற்றி காட்டுகின்றன.

மாளவிகா மோகனனை மாற்று: பல நடிகைகளின் புகைப்படங்களையும் தங்களுக்கு தெரிந்த பெண்களின் புகைப்படங்களையும் க்ரோக்கிடம் கேட்டு மாற்றி வருகின்றனர். நடிகை மாளவிகா மோகனன் போட்டோவை கொடுத்தும் பிகினியில் மாற்ற சொல்லி பல கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. பல நடிகைகளையும் க்ரோக் இப்படி எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் யாருடைய அனுமதியும் இல்லாமல் பெண்களுக்கு மன உளைச்சல் ஏற்படுமே என்கிற பொறுப்புணர்வும் இல்லாமல் இப்படி மாற்றி வருவதால், எலான் மஸ்க்கை டேக் செய்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லி வருகின்றனர். சிலர், எலான் மஸ்க்கையே பிகினியில் மாற்றி எல்லை மீறீய அட்டகாசத்தை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X