இறக்கம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே.. ஸ்லீவ்லெஸ் பிளவுஸில் பிரியா பவானிஷங்கர்.. பிரமிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை பிரியா பவானிஷங்கர் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பிரமித்து போயுள்ளனர்.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியா பவானிஷங்கர். மேயாத மான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா சாப்டர் 1, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்கள் அவரது நடிப்பில் வெளியாகியுள்ளது.

ரிலீஸுக்கு தயார்..
மேலும் குருதி ஆட்டம், ஓமணப்பெண்ணே, பொம்மாய், ஹாஸ்டல் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார் பிரியா பவானிஷங்கர்.

சேலையில் நடத்தியிருக்கும்
ருத்ரன், இந்தியன் 2, பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானிஷங்கர். இந்நிலையில் பிரியா பவானிஷங்கர் சேலையில் நடத்தியிருக்கும் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.

இறக்கமான ஸ்லீவ்லெஸ்
கோல்டன் நிற சேலை மற்றும் பிளவுஸில் தகதகவென ஜொலிக்கிறார் பிரியா பவானிஷங்கர். இறக்கமான ஸ்லீவ்லெஸ் மாடர்ன் பிளவுஸில் செம கலக்கலாக உள்ளார் பிரியா. அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டுள்ளனர்.

விலை மேலும் உயருமோ..
பிரியா பவானிஷங்கரின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன், தங்க மீன் ஒன்று கரை தேடி வந்ததோ.. தங்க தாமரையின் மின்னும் பொன் அழகை உன் மேனி பெற்றதோ... உன் மேனி தொட்ட பெருமையில் தங்கத்தின் விலை மேலும் உயருமோ என பதிவிட்டுள்ளார்.

லைக்ஸ்
மேலும் பல ரசிகர்கள் பிரியா பவானிஷங்கரின் இந்த போட்டோவுக்கு ஹார்ட்டின்களை அள்ளி குவித்து வருகின்றனர். பிரியா பவானிஷங்கரின் இந்த சேலை போட்டோ லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











