ப்பா.. அவங்களா இது.. செம ஸ்லிம்மாகி.. ஆளே மாறிப்போன நடிகை வித்யுலேகா.. வைரலாகும் போட்டோ!

நீதானே என் பொன் வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் வித்யுலேகா ராமன்.

இந்தப் படத்தில் சமந்தாவின் தோழியாக ஜெனி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் வித்யுலேகா.

அஜித் விஜய் படங்கள்

அஜித் விஜய் படங்கள்

இதன் தெலுங்கு வெர்ஷனிலும் வித்யுலேகாவே நடித்திருந்தார். தொடர்ந்து தீயா வேலை செய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், மாலினி 22 பாளையம்கோட்டை, புலி, வேதாளம், மாப்ள சிங்கம், வாகா, மீண்டும் ஒரு காதல் கதை, சரவணன் இருக்க பயமேன், பஞ்சு மிட்டாய் என பல படங்களில் நடித்துள்ளார்.

ரசிகர் பட்டாளம்

ரசிகர் பட்டாளம்

தமிழ் படங்களை காட்டிலும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்துள்ளார் வித்யுலேகா ராமன். சினிமாவில் அடியெடுத்து வைத்த சொற்ப நாட்களிலேயே 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குண்டான உடம்பு, அப்பாவியான முகம், துறுதுறு நடிப்பு என தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் வித்யுலேகா.

கடந்த ஆண்டு நிச்சயம்

கடந்த ஆண்டு நிச்சயம்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சஞ்சய் என்பவருடன் வித்யுலேகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தனது நிச்சயதார்த்தம் குறித்த தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார் வித்யுலேகா.

வித்யூலேகா போட்டோ

வித்யூலேகா போட்டோ

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள வித்யுலேகா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வித்யூலேகாவா இது என வாயடைத்துப் போயுள்ளனர்.

செம ஸ்லிம்மாக

செம ஸ்லிம்மாக

நீல நிற சுடிதாரில் செம ஸ்லிம்மாக ஆளே மாறிப்போயுள்ளார் வித்யூ. அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், என்ன ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என்றும் தீயாய் வேலை செய்யனும் குமாரு படத்தில் இருந்த வித்யூலேகாவுக்கும் இப்போது இருக்கும் வித்யூலேகாவுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் என புகழ்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X