பிக்பாஸ் லாஸ்லியாவா இது.. கண்ணுல லென்ஸ்.. கர்லி ஹேர்.. கலக்கல் மேக்கப்.. அடையாளமே தெரியலயே!
சென்னை: லாஸ்லியா ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அடையாளமே தெரியவில்லையே என வாயை பிளந்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன், கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதன் மூலம் பெரும் பிரபலமானார். அதன் பிறகு படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார் லாஸ்லியா.

ஃபேன் ஃபாலோயிங்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது கவினை காதலித்ததால் அவரது ரசிகர்களையும் பெற்றார். இதனால் லாஸ்லியாவின் ஃபேன் ஃபாலோயிங் எண்ணிக்கையும் கூடியது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினுடனான காதலை துண்டித்துவிட்டார்.

வேற லெவல் கேப்ஷன்
தற்போது மூன்று படங்களை கைவசம் வைத்துள்ள லாஸ்லியா அவ்வப்போது தனது போட்டோ ஷுட்டுக்களை தன்னுடைய சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார். அவர் ஷேர் செய்யும் ஒவ்வொரு போட்டோவுக்கும் வேற லெவலில் கேப்ஷன் கொடுத்து வருகிறார்.

லாஸ்லியா புதிய போட்டோ
குறிப்பாக கவினை தாக்கும் வகையிலேயே அவரது கேப்ஷன் இருந்து வருகிறது. இதனால் அவரை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் நடிகை லாஸ்லியா இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

லாஸ்லியாவா இது?
அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோ ஷுட் ஸ்பாட்டில் இருந்து எடுத்ததாக தெரிகிறது. அதில் கண்களில் லென்ஸ், கர்லி ஹேர் என ஓவர் மேக்கப்பில் ஆளே அடையாளம் தெரியாதப்படி உள்ளார். சட்டெனப் பார்த்தால் லாஸ்லியாவா இது என கேட்கும் அளவுக்கு உள்ளது அந்த போட்டோ.

ஓவர் மேக்கப்
அவர் இதுவரை கொடுத்து வந்த கேப்ஷன்கள் ஏழரையை கூட்டியதால் இம்முறை கேப்ஷன் எதுவும் இல்லாமல், வெறும் #Losliya என்ற ஹேஷ்டேக்கை மட்டும் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஓவர் மேக்கப் என்றும் விமர்சித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











