ப்பா.. யாரும்மா நீ... அச்சு அசல் ஸ்ரீதேவியை போல் இருக்கும் பெண்... இன்ஸ்டாவை திணறடிக்கும் வீடியோஸ்!

மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியை போன்றே இருக்கும் பெண்ணின் வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் பிரமித்து போயுள்ளனர்.

தமிழகத்தின் சிவகாசியை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஸ்ரீதேவி. 4 வயதில் கந்தன் கருணை படத்தில் முருகன் வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ரீதேவி. 1976-ஆம் ஆண்டு மூன்று முடிச்சு என்ற படத்தில் தனது 13 வயதில் கதாநாயகியாக அறிமுகமானார்.

ரஜினியுடன் அதிக படங்கள்

ரஜினியுடன் அதிக படங்கள்

இதைத் தொடர்ந்து உச்ச நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோருடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஜானி, பிரியா, காயத்ரி, தர்மயுத்தம், ராணுவ வீரன், போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா, அடுத்த வாரிசு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்திய சினிமாவில் ஸ்ரீதேவி அதிகப் படங்களில் சேர்ந்து நடித்தது நடிகர் ரஜினிகாந்துடன்தான்.

கமலுக்கு ஜோடியாக..

கமலுக்கு ஜோடியாக..

கமல்ஹாசனுடனும் ஸ்ரீதேவி இணைந்து நடித்துள்ள படங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக பதினாறு வயதினிலே, வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, சிகப்பு ரோஜாக்கள், தாயில்லாமல் நானில்லை, கல்யாண ராமேன், குரு, கோகிலா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

பாலிவுட்டிலும் டாப்

பாலிவுட்டிலும் டாப்

தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்ற அவர் அங்கேயும் வெற்றிக் கொடியை நாட்டினார். தெற்கில் இருந்து சென்று வடக்கில் உச்சம் தொட்ட தமிழ் நடிகை என்ற பெருமைக்குரிய ஸ்ரீதேவி, இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார். நடிகை ஸ்ரீதேவி பாலிவுட் நடிகரான மிதுன் சக்கரவர்த்தியை முதலில் திருமணம் செய்தார். ஆனால் மிதுன் சக்ரவர்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தன.

Recommended Video

ஆசை ஆசையாய் கேரட் கேக் செய்த ஜான்வி.. ஒரு வாய் சாப்பிட்டதுமே குஷி கொடுத்த ரியாக்ஷன பாருங்க!
இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்


இதனால் ஸ்ரீதேவியை மனைவியாக அறிவிக்க தயங்கினார் மிதுன். இதனை தொடர்ந்து மிதுன் சக்ரவர்த்தியை பிரிந்த ஸ்ரீதேவி, தன்னை வைத்து மிஸ்டர் இந்தியா படத்தை தயாரித்த தயாரிப்பாளரும் தனது தீவிர ரசிகருமான போனி கபூருடன் காதலித்தார். ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த போனி கபூரை 1996ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு ஜான்வி, குஷி ஆகிய இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானார்.

மாரடைப்பால் மரணம்

மாரடைப்பால் மரணம்

இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஸ்ரீதேவியை போல் உள்ள பெண்

ஸ்ரீதேவியை போல் உள்ள பெண்

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி போன்றே இருக்கும் பெண் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. திபாளி சவுத்ரி என்ற பெயருடைய அந்த பெண், ஸ்ரீதேவி நடித்துள்ள கதாப்பாத்திரங்களை டப்ஸ்மேஷ் செய்து வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீதேவி போன்றே இருக்கிறீர்கள் என்று பிரமிப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

டப்ஸ்மேஷ் வீடியோக்கள்

டப்ஸ்மேஷ் வீடியோக்கள்

அசப்பில் ஸ்ரீதேவி போன்று உள்ள இந்த பெண்ணின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருடைய டப்ஸ் மேஷ் வீடியோக்களையும் பார்த்த ரசிகர்கள் அப்படியே ஸ்ரீதேவி போன்றே இருக்கிறீர்கள் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அண்மையில்தான் இன்ஸ்டாவில் இணைந்தார்.

மை ஹார்ட்

மை ஹார்ட்

தனது மனைவி ஸ்ரீதேவியுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்த போனி கபூர் மை ஹார்ட் என கேப்ஷன் கொடுத்திருந்தார். போனி கபூர், லவ் ராஜன் ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரதா கபூரை வைத்து இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இதன் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார் போனி கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X