எனக்கு நிகர் நான்தான்.. யாரோடயும் ஒப்பிடாதீங்க! -லட்சுமி மேனன்
கோவை: என்னை யாரோடும் ஒப்பிட வேண்டாம். எனக்கு நிகர் நான்தான் என்கிறார் நடிகை லட்சுமி மேனன்.
தமிழகம் முழுவதும் பாண்டிய நாடு படத்துக்காக சுற்றுப் பயணம் செய்து வருகிறார்கள் விஷாலும் லட்சுமி மேனனும்.
இதற்கு முன் எந்தப் படத்துக்கும் அதன் ஹீரோயின்கள் இந்த அளவு சுற்றியதில்லை எனும் அளவுக்கு உள்ளது அவர் ஈடுபாடு.

கோவையில்
இந்த முறை கோவையில் நடந்த விழாவுக்கு வந்திருந்தார் லட்சுமி மேனன். ரசிகர்களுடன் உற்சாகமாக உரையாடினார். பாண்டிய நாடு தனக்கு பெரும் புகழைத் தந்திருப்பதாக பெருமைப்பட்டார்.

ஐஏஎஸ் லட்சியம்
அவர் கூறுகையில், "என் வாழ்க்கையில் நான் சினிமாவில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. 8-ம் வகுப்பு படிக்கும் வரை என்னுடைய கனவு ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பதுதான். ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. எதிர்பாராத விதமாக கலைத் துறைக்கு வந்து விட்டேன். இப்போது முன்னனி நடிகைகளில் ஒருவராக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

நன்றி
என்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்த தமிழ் ரசிகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் ரசிகர்கள் மிகவும் அன்பும், பாசமும் உடையவர்கள்.

எனக்கு நிகர் நானே
நான் எந்த நடிகைகளுடனும் என்னை ஒப்பிட மாட்டேன். எனக்கு நிகர் நானேதான். நான் கவர்ச்சியாக அரை குறை ஆடைகளில் நடிக்க மாட்டேன். ‘ஆக்ஷன்' படங்களிலும் நடிக்க எனக்கு விருப்பமில்லை.

பிடித்த படம் கும்கி
‘ஜிகர்தண்டா, மஞ்சப்பை, சிப்பாய், நான் சிகப்பு மனிதன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். நான் இது வரை நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த சினிமா கும்கி.


Click it and Unblock the Notifications











