சஞ்சிதாவை ஞாபகம் இருக்கிறதா...?
சென்னை: தமிழ் சினிமாவில் பிரேக் எதுவும் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும் சஞ்சிதா ஷெட்டி புதிய போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழில் தற்போது அவர் கைவசம் இருப்பது ஒரே ஒரு படம்தானாம். ஆனால் அதை அதிகரிக்கும் நோக்கில்தான் புதிய போட்டோக்களை அவர் வெளியிட்டுள்ளாராம்.
கன்னடத்திலிருந்து வந்தவரான சஞ்சிதா, தமிழில் வாய்ப்புகளைப் பிடிக்க கவர்ச்சிக்கும் தயார் என்கிறாராம்.

தில்லாலங்கடியில் முதல் கவனிப்பு
கன்னடத்தில் உடா என்ற படத்தில் நடித்து நடிகையானவர் சஞ்சிதா ஷெட்டி. அதன் பிறகு அவர் தமிழுக்கு வந்து விட்டார். தமிழில் அழுக்கன் என்ற படத்தில் நடித்தார். ஆனால் தில்லாலங்கடியில்தான் அவருக்கு முதல் கவனிப்பு கிடைத்தது.

தமன்னாவின் தங்கச்சி
தில்லாலங்கடியில் தமன்னாவின் தங்கச்சியாக நடித்திருந்தார் சஞ்சிதா. இருந்தாலும் அந்த ரோலிலும் தன்னை அனைவரும் கவனிக்கும் வகையில் காட்சி தந்திருப்பார்.

ஆரஞ்சு மூலம் தெலுங்கு
தில்லாலங்கடி பட இயக்குநர் ஜெயம் ராஜாவின் ரெக்கமண்டேஷன் மூலம் பின்னர் தெலுங்கில் ஆரஞ்சு படத்தில் அறிமுகமானார். இதன் மூலம் தெலுங்கிலும் அவர் பரிச்சயமானார்.

கொள்ளைக்காரன் நாயகி
தமிழில் சஞ்சிதா தனி நாயகியாக நடித்த முழுமையான படம் என்றால் அது கொள்ளைக்காரன்தான். விதார்த்துக்கு ஜோடியாக இதில் நடித்திருந்தார் சஞ்சிதா. படம் பெரிதாக போகவில்லை என்றாலும் சஞ்சிதா கவனிக்கப்பட்டார்.

கைவசம் சூது கவ்வும்
தற்போது சூது கவ்வும் என்ற படத்தில் மட்டும் நடித்துக்கொண்டிருக்கிறாராம் சஞ்சிதா. இதில் அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் விஜய் சேதுபதி.


Click it and Unblock the Notifications